இந்தியா

ஐ.நா. பொது சபையில் இந்தியப் பிரதமர் மோடி பேசும்பொழுது, புறநானூறில் உள்ள கணியன் பூங்குன்றனார் வரிகளை மேற்கோள் காட்டி பேசியதற்கு தமிழகத்தில் பலரும், பாராட்டும், வரவேற்பும் தெரிவித்துள்ளனர்.

குறிப்பாக தமிழக முலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி, கவிப்பேரரசு வைரமுத்து உட்பட தமிழ் தலைமைகள் பலரும், இவ்வுரைக்கு வரவேற்புத் தெரிவித்திருக்கிறார்கள்.

இந் நிலையில், ஐ.என்.எக்ஸ். மீடியா வழக்கில் கைதாகி, திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ள முன்னாள் மத்திய நிதி மந்திரி ப. சிதம்பரம் , 'தமிழின மக்கள் ஒன்றுபட்டு ஒரே குரலில் பேசினால், தமிழ் மொழியின் மேன்மையையும், தமிழ் கலாச்சாரத்தின் உயர்வையும் அனைவரும் ஏற்பார்கள்' என ட்விட்டர் செய்தி மூலம் தெரிவித்திருக்கின்றார். சிறையிலுள்ள அவரது செய்தியினை, அவரது குடும்பத்தினர் ட்விட்டரில் வெளியிட்டுள்ளார்கள்.

 

எமதுபார்வை

தமிழகத்தின் தலைப்புச் செய்திகள்

கோடம்பாக்கம் கோனர்

“தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் கடந்த காலச் செயற்பாடுகள் தொடர்பில் தமிழ் மக்கள் மதிப்பீட்டைச் செய்ய வேண்டும். அதன் பின்னரே, இம்முறை வாக்களிக்க வேண்டும்.” என்று தமிழ் மக்கள் தேசியக் கூட்டணியின் தலைவர் சி.வி.விக்னேஸ்வரன் கோரியுள்ளார். 

“எதிர்வரும் பொதுத் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் எவரும் தேர்தல் பிரச்சார நடவடிக்கைகளுக்காக எனது படத்தினை பயன்படுத்தக் கூடாது.” என்று ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ உத்தரவிட்டுள்ளார். 

சிபிசிஐடி போலீசார் விசாரணை கீழ் கொண்டுவரப்பட்ட சாத்தான்குளம் வியாபாரிகள் காவல்நிலையத்தில் உயிரிழந்த வழக்கு மதுரை உயிர் நீதிமன்றகிளையில் நடைபெற்றுவருகிறது.

கோவிட்-19 வைரஸின் பெருந்தொற்று உலகப் பேரிடராக மாறி இந்தியாவில் 6 லட்சம் பேர் தொற்றுக்கு ஆளாகினர்.

வடக்கு மியான்மரில் உள்ள சுரங்கம் ஒன்றில் நிலச்சரிவு ஏற்பட்டதில் குறைந்தது 113 பேர் வரை பலியாகியிருப்பதாக தெரிவிக்கப்படுகிறது.

சீன நாடாளுமன்றத்தில் செவ்வாய்க்கிழமை ஹாங்கொங்கில் தேசிய பாதுகாப்புச் சட்டத்தைக் கொண்டு வருவதற்கான மசோதாவுக்கு ஒப்புதல் பெறப்பட்டது. இதன் மூலம் ஹாங்கொங்கின் தன்னாட்சி அதிகாரம் முற்றிலும் ஒழிக்கப் பட்டு விட முடியும் என விமரிசகர்கள் எச்சரித்துள்ளனர்.