இந்தியா

தமிழகத் தலைநகர் சென்னை ஐ.ஐ.டி.யின் 56வது பட்டமளிப்பு விழா, மற்றும் இந்தியா சிங்கப்பூர் இணைந்து நடத்தும் ‘ஹேக்கத்தான்’ தொழில்நுட்ப போட்டி வெற்றியாளர்களுக்கு பரிசு வழங்கும் நிகழ்ச்சி ஆகியன, கிண்டியில் உள்ள ஐஐடி வளாகத்தில் இன்று நடைபெற்றது. இந் நிகழ்ச்சிகளின் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்ட பிரதமர் நரேந்திரமோடி தனதுரையின் போது தமிழ்மொழியைப் போற்றுவோம், தமிழராய் மகிழட்வோம் எனும் வகையில் சிறப்பித்துக் கூறினார்.

டெல்லியில் இருந்து தனி விமானம் மூலம் இன்று காலை சென்னை வந்திறங்கி பிரதமருக்கு விமான நிலையத்தில், தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித், முதல் அமைச்சர் பழனிசாமி, துணை முதல் அமைச்சர் ஓ. பன்னீர்செல்வம் மற்றும் மந்திரிகள் ஆகியோர் பூங்கொத்துகள், ரோஜா பூ ஆகியவை கொடுத்து உற்சாக வரவேற்பு அளித்தனர். பாஜக சார்பில் முன்னாள் மத்திய அமைச்சர் பொன் ராதாகிருஷ்ணன், சி.பி ராதாகிருஷ்ணன், எச்.ராஜா உட்பட பலர் வரவேற்றனர்.

பின்னர் பட்ட மளிப்பு விழாவில் கலந்து கொண்டு அவர் உரையாற்றுகையில், " உலகின் மிகப்பழமையான மொழி தமிழ். தமிழை போற்றுவோம். எனது வெளிநாட்டுப் பயணங்களின் போது , இளைய இந்தியாவின் திறமை கண்டு உலகத் தலைவர்கள் வியப்பதை நான் அவதானித்துள்ளேன். எதிர்கால இந்தியா குறித்த நம்பிக்கையை அது தோற்றுவிக்கிறது. இந்த நம்பிக்கையின் பின்னால் சென்னை ஐஐடி உள்ளது. இங்குள்ள மாணவர்களின் திறமையின் பின்னால், ஆசிரியர்களும், பெற்றோர்களும் இருக்கிறார்கள். அவர்களை நன்றியோடு நினைவுகொள்ளுங்கள். எதிர்காலம் குறித்த அபாரமான கனவுகளைக் காணுங்கள். உலகின் பழமையான மொழிகளில் ஒன்றான தமிழைப் போற்றுவோம். அம் மொழிக்குச் சொந்தமான தமிழகத்தில் நாம் இருக்கின்றோம். இங்குள்ள இக் கல்விநிலையம் வரலாற்றுச் சிறப்புமிக்கது. உலகெங்கிலும், அறிவியல், தொழில்நுட்பம், சார்ந்த விடயங்களில் இந்தியர்கள் பலர் உழைத்து வருகின்றார்கள். அவர்களில் முக்கியமான பலர் இக் கல்விச்சாலையிலிருந்து உருவாகியவர்கள். இந்தியாவிற்கான அடையாளத்தை உருவாக்குபவர்களாக நீங்கள் இருக்கின்றீர்கள் என்பதை நினைவில் வைத்து, முன்னோக்கிச் செல்லுங்கள். உங்களுடைய பெற்றோர்களை நான் வாழ்த்துகிறேன். அவர்களது தியாகமே உங்களை உயர்த்தியிருக்கிறது." என கூறினார்.

 

எமதுபார்வை

தமிழகத்தின் தலைப்புச் செய்திகள்

கோடம்பாக்கம் கோனர்

“தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் கடந்த காலச் செயற்பாடுகள் தொடர்பில் தமிழ் மக்கள் மதிப்பீட்டைச் செய்ய வேண்டும். அதன் பின்னரே, இம்முறை வாக்களிக்க வேண்டும்.” என்று தமிழ் மக்கள் தேசியக் கூட்டணியின் தலைவர் சி.வி.விக்னேஸ்வரன் கோரியுள்ளார். 

“எதிர்வரும் பொதுத் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் எவரும் தேர்தல் பிரச்சார நடவடிக்கைகளுக்காக எனது படத்தினை பயன்படுத்தக் கூடாது.” என்று ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ உத்தரவிட்டுள்ளார். 

சிபிசிஐடி போலீசார் விசாரணை கீழ் கொண்டுவரப்பட்ட சாத்தான்குளம் வியாபாரிகள் காவல்நிலையத்தில் உயிரிழந்த வழக்கு மதுரை உயிர் நீதிமன்றகிளையில் நடைபெற்றுவருகிறது.

கோவிட்-19 வைரஸின் பெருந்தொற்று உலகப் பேரிடராக மாறி இந்தியாவில் 6 லட்சம் பேர் தொற்றுக்கு ஆளாகினர்.

வடக்கு மியான்மரில் உள்ள சுரங்கம் ஒன்றில் நிலச்சரிவு ஏற்பட்டதில் குறைந்தது 113 பேர் வரை பலியாகியிருப்பதாக தெரிவிக்கப்படுகிறது.

சீன நாடாளுமன்றத்தில் செவ்வாய்க்கிழமை ஹாங்கொங்கில் தேசிய பாதுகாப்புச் சட்டத்தைக் கொண்டு வருவதற்கான மசோதாவுக்கு ஒப்புதல் பெறப்பட்டது. இதன் மூலம் ஹாங்கொங்கின் தன்னாட்சி அதிகாரம் முற்றிலும் ஒழிக்கப் பட்டு விட முடியும் என விமரிசகர்கள் எச்சரித்துள்ளனர்.