இந்தியா

ராஜஸ்தானின் ஜெய்சால்மர் மாவட்டத்தின் தார் பாலை வனம் உள்ள பொக்ரான் பகுதியில் செவ்வாய் மாலை 5 அல்லது அதற்கும் மேற்பட்ட பலத்த குண்டு வெடிப்புச் சத்தங்கள் கேட்டுள்ளன.

இதனால் ஒரு நிலநடுக்கம் போன்று வீடுகளும் கட்டடங்களும் குலுங்கியதால் பொது மக்கள் மத்தியில் பீதி ஏற்பட்டது. இந்த குண்டு வெடிப்புக்கள் எல்லை தாண்டி வந்த பாகிஸ்தான் தீவிரவாதிகளால் தான் நிகழ்த்தப் பட்டிருக்கக் கூடும் என முதலில் மக்கள் நினைத்த போதும் பின்னர் அது அவ்வாறில்லை எனத் தெரிய வந்துள்ளது.

உண்மையில் குறித்த நேரத்தில் தமது பழைய பீரங்கிக் குண்டுகள் அழிக்கப் பட்டதாக இந்திய இராணுவம் விளக்கம் அளித்துள்ளது. மறுபுறம் பாகிஸ்தானிலோ இந்த இராணுவ நிகழ்வானது இந்தியாவின் தந்திரோபாய அணுவாயுதப் பரிசோதனை நிகழ்வு என பாதுகாப்புப் படையினரால் போலிப் பிரச்சாரம் முன்னெடுக்கப் பட்டுள்ளது.

எனினும் இது வழக்கமான மற்றும் அசாதாராணமற்ற ஒரு நிகழ்வு என இந்திய இராணுவம் தெந்ரிவித்துள்ளது. 1998 மே மாதம் இந்தியப் பிரதமர் வாஜ்பேய் ஆட்சியில் இருந்த போது இந்தியா பொக்ரானில் தனது முதல் அணுகுண்டு சோதனைகளை நிகழ்த்தியிருந்தது குறிப்பிடத்தக்கது.

 

எமதுபார்வை

தமிழகத்தின் தலைப்புச் செய்திகள்

கோடம்பாக்கம் கோனர்

இலங்கைக் கிரிக்கெட் அணியின் துடுப்பாட்ட வீரர் குசல் மென்டிஸ் சற்று முன்னர் (இன்று ஞாயிற்றுக்கிழமை) கைது செய்யப்பட்டுள்ளார். 

எதிர்வரும் பொதுத் தேர்தலின் பின்னர் கட்சி சார் பதவிகளில் இருந்து விலகுவதாக சுதந்திரக் கட்சியின் தலைவரும் முன்னாள் ஜனாதிபதியுமான மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். 

இன்று தளர்வுகள் இல்லாத முழுமையான ஊரடங்கு தமிழகத்தில் கடைப்பிடிக்கப்பட்டுள்ளது.

இந்தியாவின் வேகமெடுத்திருக்கும் கொரோனா நோய்த்தொற்றால் கடந்த 24 மணி நேரத்தில் 22,772பேர் பாதிப்படைந்திருப்பதாக தெரிவிக்கப்படுகிறது.

கொரோனா வைரஸ் தொற்று உறுதிப் படுத்தப் பட்ட பாகிஸ்தான் வெளியுறவுத் துறை அமைச்சர் ஷாஹ் மஹ்மூட் குரேஷி ராவல்பிண்டியில் இருக்கும் இராணுவ வைத்திய சாலையில் அனுமதிக்கப் பட்டுள்ளதாகத் தெரிய வருகின்றது.

அண்மைக் காலமாக இந்தியா, தைவான், ஹாங்கொங் மற்றும் திபேத் ஆகிய நாடுகளுடன் மோதல் போக்கை கடைப்பிடிக்கும் சீனாவுக்கு மறைமுகமாக எச்சரிக்கை விடுக்கும் வகையில், தென்சீனக் கடற்பரப்பில் 2 போர்க் கப்பல்களை அனுப்பி போர்ப் பயிற்சியை ஆரம்பித்துள்ளது அமெரிக்கா.