இந்தியா

நமது ஹெலிகாப்டரை நாமே சுட்டு வீழ்த்தியது மிகப்பெரிய தவறு என, இந்திய விமானப்படைத் தளபதி ராகேஷ் குமார் சிங் பதாரியா செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

இன்று புதுடெல்லியில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த அவர்; சென்ற பிப்ரவரி 27-ம் தேதி நடைபெற்ற பதான்கோட் தாக்குதலுக்குப் பின்னர், நமது விமானப்படை வீரர்கள் தீவிரக் கண்காணிப்பில் இருந்தார்கள். அப்போது வானில் நமது எம்ஐ-17 ரக ஹெலிகாப்டர் சென்றதை, எதிரிநாட்டு ஹெலிகாப்டர் என தவறுதலாக நினைத்து ஏவுகணை மூலம் சுட்டு வீழ்த்தியதில், ஹெலிகாப்டரில் இருந்த 6 விமானப்படை வீரர்களும் பலியானார்கள். நமது ஹெலிகாப்டரை நாமே சுட்டு வீழ்த்தியது மிகப்பெரிய தவறு.

இந்த தவறைச் செய்த 5 அதிகாரிகள் மீது வழக்குப்பதிவு செய்து நீதிமன்ற விசாரணை நடந்து அறிக்கை அளிக்கப்பட்டுள்ளது. அவர்கள் மீது விரைவில் விமானப்படை சார்பில் நடவடிக்கை எடுக்கப்படுமெனவும், இதுபோன்ற தவறுகள் வரும்காலத்தில் நடைபெறாதிருப்பதில் கவனம் கொள்ளப்படும் எனவும், எந்தவிதமான அசம்பாவித சூழலையும் சந்திக்க விமானப்படை தயாராக இருக்கிறதெனவும் குறிப்பிடடார்.

 

எமதுபார்வை

தமிழகத்தின் தலைப்புச் செய்திகள்

கோடம்பாக்கம் கோனர்

“தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் கடந்த காலச் செயற்பாடுகள் தொடர்பில் தமிழ் மக்கள் மதிப்பீட்டைச் செய்ய வேண்டும். அதன் பின்னரே, இம்முறை வாக்களிக்க வேண்டும்.” என்று தமிழ் மக்கள் தேசியக் கூட்டணியின் தலைவர் சி.வி.விக்னேஸ்வரன் கோரியுள்ளார். 

“எதிர்வரும் பொதுத் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் எவரும் தேர்தல் பிரச்சார நடவடிக்கைகளுக்காக எனது படத்தினை பயன்படுத்தக் கூடாது.” என்று ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ உத்தரவிட்டுள்ளார். 

சிபிசிஐடி போலீசார் விசாரணை கீழ் கொண்டுவரப்பட்ட சாத்தான்குளம் வியாபாரிகள் காவல்நிலையத்தில் உயிரிழந்த வழக்கு மதுரை உயிர் நீதிமன்றகிளையில் நடைபெற்றுவருகிறது.

கோவிட்-19 வைரஸின் பெருந்தொற்று உலகப் பேரிடராக மாறி இந்தியாவில் 6 லட்சம் பேர் தொற்றுக்கு ஆளாகினர்.

வடக்கு மியான்மரில் உள்ள சுரங்கம் ஒன்றில் நிலச்சரிவு ஏற்பட்டதில் குறைந்தது 113 பேர் வரை பலியாகியிருப்பதாக தெரிவிக்கப்படுகிறது.

சீன நாடாளுமன்றத்தில் செவ்வாய்க்கிழமை ஹாங்கொங்கில் தேசிய பாதுகாப்புச் சட்டத்தைக் கொண்டு வருவதற்கான மசோதாவுக்கு ஒப்புதல் பெறப்பட்டது. இதன் மூலம் ஹாங்கொங்கின் தன்னாட்சி அதிகாரம் முற்றிலும் ஒழிக்கப் பட்டு விட முடியும் என விமரிசகர்கள் எச்சரித்துள்ளனர்.