இந்தியா

சொத்து குவிப்பு வழக்கில் நான்கு ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்ட சசிகலாவின் சிறை வாழ்க்கைளை சிறப்பு வாழ்க்கையாக மாற்றுவதற்கான வசதிகள் செய்து கொடுக்கப்பட்டுள்ளது என கர்நாடக சிறைத்துறை டி.ஐ.ஜி. ரூபா கூறிய குற்றச்சாட்டு உண்மையென விசாரணையில் தெரியவந்துள்ளது.

மறைந்த தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் உடன்பிறவாச் சகோதரியெனவும், சின்னம்மா என அதிமுகவினரால் அழைக்கப்பட்டும் வந்த, சசிகலாவிற்கு, பெங்களூரு பரப்பன அக்ரஹாரா மத்திய சிறையில் பல்வேறு சிறப்பு வசதிகள் செய்து கொடுக்கப்பட்டு இருப்பதாக புகார்கள் கூறப்பட்ட நிலையில், கர்நாடக சிறைத்துறை அதிகாரியாக நியமிக்கப்பட்ட டி.ஐ.ஜி.ரூபா பரப்பன அக்ரஹாரா சிறைக்கு நேரில் சென்று ஆய்வு செய்தபோது, சசிகலாவுக்கு தனி சமையலறையுட்பட மேலும் சில சிறப்பு வசதிகள் மற்றும் சலுகைகள் வழங்கப்பட்டு வருவது அதிகாரி ரூபாவின் கவனத்திற்கு வந்தது.

தான் அவதானித்த விடயங்களை, ரு அறிக்கையாகத் தயாரித்து மாநில போலீஸ் டி.ஜி.பி. கவனத்துக்கு அனுப்பிவைத்தார். சசிகலாவுக்கு தனி சமையலறை மற்றும் சிறப்பு வசதிகள் செய்து கொடுக்க சசிகலாவிடம் இருந்து டி.ஜி.பி. சத்தியநாராயணராவ் ரூ.2 கோடி லஞ்சம் வாங்கியுள்ளார் என்ற குற்றச்சாட்டினையும், பெங்களூரு சிறையில் சசிகலாவுக்கு 5 அறைகள் ஒதுக்கப்பட்டு, கட்டில் மெத்தை, டெலிவிஷன் பெட்டி, தனி சமையலறை உள்ளிட்ட சிறப்பு வசதிகள் செய்து கொடுக்கப்பட்டு இருப்பதாகவும். சசிகலா சிறையில் இருந்து சல்வார் கமீஸ் உடை அணிந்து கையில் பையுடன் சென்று வரும் வீடியோ இடம் பெற்று இருந்ததென்றும் குறிப்பிட்டிருந்தார்.

இந்த முறைகேடு புகார் குறித்து உயர்மட்ட விசாரணைக்கு கர்நாடக அரசு உத்தரவிட்டு இருந்த நிலையில், சிறைவிதிகளை மீறி சசிகலா வெளியே சென்றது குறித்து காவல் அதிகாரி ரூபா கூறிய புகார் உண்மை எனவும், சிறையில் சலுகைகளைப் பெற சசிகலா லஞ்சம் தந்ததாக வெளியான தகவலும் உண்மைதான் எனவும், விசாரனைகுழுவின் அறிக்கை தெரிவித்துள்ளதாக அறியவருகிறது.

இவற்றையும் பார்வையிடுங்கள்

கொரோனா வைரஸ் தொற்று காரணமாக வீடுகளில் நிகழும் உயிரிழப்புக்களைத் தடுப்பதற்கு உடனடி நடவடிக்கை எடுக்குமாறு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ உத்தரவிட்டுள்ளதாக இராணுவ தளபதி சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார். 

மஹர சிறைச்சாலையில் நேற்று ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்ற வன்முறையை அடுத்து தமது வைத்தியசாலைக்கு 6 சடலங்கள் எடுத்து வரப்பட்டதாக ராகம வைத்தியசாலை நிர்வாகம் அறிவித்துள்ளது. 

கொரோனா பாதிப்பு காரணமாக தமிழகத்தில் அமுலில் இருந்துவரும் ஊடரங்கில் ஒவ்வொரு மாத முடிவிலும் சில தளர்வுகளை அரசு அறிவித்துவருகிறது.

மீண்டும் வங்கடலில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வுபகுதியால் தென் தமிழகத்தில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இத்தாலியின் சுகாதார அதிகாரிகள் கடந்த வெள்ளிக்கிழமை வழங்கிய சோதனை தரவுகளின் படி, கடந்த 14 நாட்களில் நாடு முழுவதும் , கோவிட் -19 வைரஸ் தொற்று வீதம் குறைந்திருப்பதனால், மூன்று சிவப்பு மண்டலங்கள் மற்றும் இரண்டு ஆரஞ்சு மண்டலங்களில் இந்த வார இறுதியில் அதாவது இன்று ஞாயிறு முதல் பாதுகாப்பு விதிகள் தளர்த்தப்படும்.

சுவிற்சர்லாந்தில் முதல் கொரோனா வைரஸ் தடுப்பூசிகள் அடுத்து வரும் இரண்டு மாதங்களுக்குள் வெளியிடப்படும் என்று சுவிஸ் சுகாதார அமைச்சர் அலைன் பெர்செட் தெரிவித்துள்ளார். சென்ற வியாழக்கிழமை இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பொன்றில், பெர்செட் இதனைத் தெரிவித்துள்ளார்.