இந்தியா

இந்தியா வரும் சீன அதிபர் ஜின்பிங்கினை, தமிழகத்தின் முக்கிய சுற்றுலாத் தலங்களில் ஒன்றான மாமல்லபுரத்தில் வரவேற்கின்றார் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி.

நாளை சென்னை வரும் சீன அதிபருக்கு பிரம்மாண்ட வரவேற்பு அளிக்க தமிழக அரசின் சார்பில் சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. சீன அதிபருடன் பேச்சுவார்த்தை நடாத்தும் இந்தியப் பிரதமர் மோடி, அவரைக் கௌரவிக்கும் வகையில் சிறப்பு விருந்துபசாரம் ஒன்றினை அளிப்பதற்கும் ஏற்பாடு செய்துள்ளார்.

அரச முக்கியத்துவம் வாய்ந்த இந்த விருந்துபசாரத்தில், முக்கிய அரசியற் தலைவர்கள், அதிகாரிகள், பிரமுகர்கள் கலந்து கொள்வார்களெனவும், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தும் இந்த விருந்துபசாரத்தில் கலந்து கொள்ளவதற்கு அழைக்கப்பட்டிருப்பதாகவும் அறியவருகிறது.

இவற்றையும் பார்வையிடுங்கள்

கொரோனா வைரஸ் தொற்று காரணமாக வீடுகளில் நிகழும் உயிரிழப்புக்களைத் தடுப்பதற்கு உடனடி நடவடிக்கை எடுக்குமாறு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ உத்தரவிட்டுள்ளதாக இராணுவ தளபதி சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார். 

மஹர சிறைச்சாலையில் நேற்று ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்ற வன்முறையை அடுத்து தமது வைத்தியசாலைக்கு 6 சடலங்கள் எடுத்து வரப்பட்டதாக ராகம வைத்தியசாலை நிர்வாகம் அறிவித்துள்ளது. 

மீண்டும் வங்கடலில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வுபகுதியால் தென் தமிழகத்தில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தியாவின் டெல்லியை நோக்கி விவசாயிகள் 2வது நாளாக பேரணி மேற்கொண்டுள்ளனர். இதனால் டெல்லியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இத்தாலியின் சுகாதார அதிகாரிகள் கடந்த வெள்ளிக்கிழமை வழங்கிய சோதனை தரவுகளின் படி, கடந்த 14 நாட்களில் நாடு முழுவதும் , கோவிட் -19 வைரஸ் தொற்று வீதம் குறைந்திருப்பதனால், மூன்று சிவப்பு மண்டலங்கள் மற்றும் இரண்டு ஆரஞ்சு மண்டலங்களில் இந்த வார இறுதியில் அதாவது இன்று ஞாயிறு முதல் பாதுகாப்பு விதிகள் தளர்த்தப்படும்.

சுவிற்சர்லாந்தில் முதல் கொரோனா வைரஸ் தடுப்பூசிகள் அடுத்து வரும் இரண்டு மாதங்களுக்குள் வெளியிடப்படும் என்று சுவிஸ் சுகாதார அமைச்சர் அலைன் பெர்செட் தெரிவித்துள்ளார். சென்ற வியாழக்கிழமை இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பொன்றில், பெர்செட் இதனைத் தெரிவித்துள்ளார்.