இந்தியா

தமிழகத்தின் வரலாற்றுப் பெருமை மிகு மாமல்லபுரத்தில் இன்றும் நாளையும் சீன அதிபர் ஜி ஜின்பிங்கிற்கும், இந்தியப் பிரதமர் மோடிக்கும், இடையில் சந்திப்புக்களும், பேச்சுவார்த்தைகளும் இடம்பெறுகின்றன.

மேற்படி பேச்சுவார்த்தைகளில் கலந்து கொள்வதற்காக, பீஜிங்கிலிருந்து சென்னைக்கு, இன்று காலை தனி விமானம் மூலம் புறப்பட்டார். சீனத் தலைவர். இவர் இன்று பிற்பகல் சென்னை வந்தடைவார் என்றும், மாலையில் மாமல்லபுரத்தில் பிரதமர் மோடியுடனான சந்திப்புக்களை மேற்கொள்வார் என்றும் தெரிவிக்கப்படுகிறது.

சந்திப்பு, மற்றும் பேச்சுவார்த்தைகளில் கலந்து கொள்வதற்காக பிரதமர் நரேந்திர மோடி டெல்லியிலிருந்து சென்னைக்கு இன்று முற்பகலில் வந்து சேர்ந்தார். இரு தலைவர்களையும் வரவேற்பதற்கு தமிழக அரசு சிறப்பான ஏற்பாடுகளைச் செய்துள்ளது.

 

எமதுபார்வை

தமிழகத்தின் தலைப்புச் செய்திகள்

கோடம்பாக்கம் கோனர்

இலங்கைக் கிரிக்கெட் அணியின் துடுப்பாட்ட வீரர் குசல் மென்டிஸ் சற்று முன்னர் (இன்று ஞாயிற்றுக்கிழமை) கைது செய்யப்பட்டுள்ளார். 

எதிர்வரும் பொதுத் தேர்தலின் பின்னர் கட்சி சார் பதவிகளில் இருந்து விலகுவதாக சுதந்திரக் கட்சியின் தலைவரும் முன்னாள் ஜனாதிபதியுமான மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். 

இன்று தளர்வுகள் இல்லாத முழுமையான ஊரடங்கு தமிழகத்தில் கடைப்பிடிக்கப்பட்டுள்ளது.

இந்தியாவின் வேகமெடுத்திருக்கும் கொரோனா நோய்த்தொற்றால் கடந்த 24 மணி நேரத்தில் 22,772பேர் பாதிப்படைந்திருப்பதாக தெரிவிக்கப்படுகிறது.

சீனாவில் மீண்டும் ஒரு முறை பன்றிகளிடம் இருந்து மனிதர்களிடையே பரவும் புதிய வகை வைரஸ் கண்டு பிடிக்கப் பட்டிருப்பதாகவும், இதுவும் கொரோனா போன்று பரவக் கூடும் என்றும் சமீபத்தில் ஊடங்களிடையே பரபரப்புச் செய்தி வெளியாகி இருந்தது.

3 மாதத்துக்கும் அதிகமான கடுமையான லாக்டவுன் காலத்தை அடுத்து இங்கிலாந்தில் இன்று சனிக்கிழமை முதற்கொண்டு பப்களும், உணவு விடுதிகளும் திறப்பதற்கு அனுமதியளிக்கப் பட்டுள்ளது.