இந்தியா

பஞ்சமி நில உரிமை மீட்பை மையமாக வைத்து, சாதிய சமூகத்தைச் சாடி, சாதி வன்மத்தை கேள்வி கேட்கும் துணிச்சல் மிக்கப்படமாக வந்திருக்கும் அசுரன் படம் அல்ல பாடம் என பாரட்டியிருக்கின்றார் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின்

நெல்லை - நாங்குநேரி மற்றும் விழுப்புரம் - விக்கிரவாண்டி, தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் பிரச்சாரங்களில் பரபரப்பாக இருக்கும் ஸ்டாலின், அசுரன் படம் சிறப்பாக வந்திருக்கிறது எனக் கேள்வியுற்று, தூத்துக்குடி பாலகிருஷ்ணா திரையரங்கில் அப்படத்தினைப் பார்த்திருக்கின்றார்.

படம் பார்த்து முடித்ததும், கதை, களம், வசனம் என வென்று காட்டியிருக்கும் வெற்றி மாறனுக்கும், படத்தில் வாழ்ந்து காட்டியிருக்கும் தனுசுக்கும் பாராட்டுகள் என தனது ட்விட்டர் பக்கம் மூலம் வாழ்த்துத் தெரிவித்திருக்கின்றார். அவரது பாராட்டுக்கு நடிகர் தனுஸ் நன்றி தெரிவித்துப் பதிலளித்துள்ளார்.

 

எமதுபார்வை

தமிழகத்தின் தலைப்புச் செய்திகள்

கோடம்பாக்கம் கோனர்

“இந்திய – இலங்கை ஒப்பந்தத்தின் பிரகாரம் இலங்கை அரசியலமைப்பில் கொண்டு வரப்பட்ட 13வது திருத்தச் சட்டத்தை இல்லாமல் செய்வதற்கு இந்தியா அனுமதிக்காது.” என்று புளொட் அமைப்பின் தலைவர் தர்மலிங்கம் சித்தார்த்தன் தெரிவித்துள்ளார். 

“மதகுருமாரையும், அடிப்படைவாதிகளையும், தீவிரவாதிகளையும் இணைத்துக் கொண்டு அரசியலமைப்பினைத் தயாரித்த நாடுகளுக்கு நேர்ந்த கதியை நாம் மறந்து செயற்படக் கூடாது.” என்று முன்னாள் நிதியமைச்சர் மங்கள சமரவீர எச்சரிக்கை விடுத்துள்ளார். 

இந்திய மத்திய மந்திரிசபை நவம்பர் மாதம் வரை ஏழைமக்களுக்கு இலவச அரிசி மற்றும் பருப்பு வழங்க ஒப்புதல் வழங்கியுள்ளது.

இந்தியாவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய சாத்தான்குளம் போலீசார் விசாரணையில் உயிரிழந்த தந்தை-மகன் சம்பவத்தையடுத்து தமிழ்நாட்டில் பிரெண்ட்ஸ் ஆஃப் போலீஸ் அமைப்பினருக்கு அரசு தடை விதித்துள்ளது.

கொரோனா வைரஸ் தொற்று நோய்களின் அதிக ஆபத்து இருப்பதாக அறிவிக்கப்பட்ட 13 நாடுகளுக்கு இத்தாலி தனது எல்லைகளை மூடுவதாக அறிவித்துள்ளது.

கொரோனா வைரசின் கடும் பாதிப்புக்குள்ளான நாடுகளில் ஒன்றான இத்தாலியில், தலையொட்டிப்பிறந்த இரட்டையர்களை அறுவை சிகிச்சை மூலம் வெற்றிகரமாகப் பிரித்து, மருத்துவ உலகில் மகத்தான சாதனை புரிந்துள்ளார்கள் இத்தாலிய மருத்துவர்கள்.