இந்தியா

ராஜீவ் கொலை வழக்கில் சிறையில் உள்ள ஏழு பேரின் விடுதலை தொடர்பில் ஆளுநர் என்ன சொன்னார் என்பதை தமிழக முதல்வர் மக்களுக்குத் தெரியப்படுத்த வேண்டும் என திமுக தலைவர் டு.க. ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

எழுவரின் விடுதலை தொடர்பில் தமிழக அமைச்சரவையின் தீர்மானத்தை தமிழக ஆளுநர் ஏற்கவில்லை என்ற தகவல் வெளியாகியது. இது தொடர்பில் தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியிடம், ஆளுநர் அதிகாரபூர்வமற்ற முறையில் உரையாடியுள்ளதாகவும், ஆயினும் தமிழக அரசுக்கு அதிகாரபூர்வமாக எதையும் தெரிவிக்கவில்லை என்றும் முலம் அத் தகவல்கள் தெரிவித்தன.

இது தொடர்பாக தனது ட்விட்டர் பதிவு மூலம் விட்டுள்ள ஸ்டாலின், “பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரை விடுதலை செய்ய வேண்டும் என தமிழக அமைச்சரவை நிறைவேற்றி அனுப்பிய தீர்மானத்தை ஏற்றுக்கொள்ள முடியாது" என தமிழக ஆளுநர், முதலமைச்சரிடம் தெரிவித்து விட்டதாக வெளியாகியுள்ள செய்தி குறித்து முதல்வர் அவர்கள், தமிழக மக்களுக்கு உடனே விளக்கம் தந்திட வேண்டும்” என வலியுறுத்தியுள்ளார்.