இந்தியா
Typography

இயக்குனர் வெற்றி மாறனின் இயக்கத்தில் தனுஸ் நடித்து வெளிவந்த 'அசுரன்' படத்தினை திமுக தலைவர் `படம் மட்டுமல்ல பாடம்’ என திமுக தலைவர் ஸ்டாலின் பாராட்டியிருந்தார்.

இந்த பாராட்டுத் தொடர்பில், பட்டாளி மக்கள் கட்சி நிறுவனர் ராமதாஸ் அசுரன் படம் கற்றுத் தந்த பாடத்தை ஏற்று, முரசொலி அலுவலகத்திற்காக வளைக்கப்பட்ட பஞ்சமி நிலங்களை உரியவர்களிடம் ஸ்டாலின் மீண்டும் ஒப்படைப்பார் என தனது ட்வீட்டர் செய்தியில் பதிவிட்டார்.

இதனைத் தொடர்ந்து முரசொலி அலுவலகம் பஞ்சமி நிலத்தில் கட்டப்பட்டதா? என்ற கேள்விகள் அதற்கான பதில்களுமென இரு தலைவர்களும் மாறி மாறி கருத்துக்கள் தெரிவித்து வருகின்றனர்.

இறுதியாக முரசொலி அலுவலகம் , முன்பு அரசு ஆதி திராவிட மாணவர் நல விடுதி இருந்த இடம் என்பது உண்மை விளம்பி ஸ்டாலினுக்கு தெரியுமா? என ராமதாஸட கேள்வி எழுப்பியுள்ளார். முரசொலியுள்ளஇடம் தனியாருக்குச் சொந்தமான மனை என்றால் அங்கே எவ்வாறு அரச ஆதி திராவிடர் மாணவர் நல விடுதி இருந்திருக்க முடியும் எனவும், நில அபகரிப்பு தி.மு.க.வினருக்கு முழு நேரத் தொழில் தானே? எனவும் குற்றச் சாட்டியுள்ளதாகவும் அறிய வருகிறது.

காட்டாளி மக்கள் கட்சி முன்பு திமுக கூட்டணியின் பங்காளிக் கட்சி  என்பது குறிப்பிடத்தக்கது.

BLOG COMMENTS POWERED BY DISQUS

கோவிட்- 19 கோரோனா வைரஸ், இத்தாலியில் நடந்தது என்ன ?  திரும்பத் திரும்பச் சொல்வோம் அவர்கள் விட்ட தவறினைச் செய்யாதிருப்போம் ! 

கொரோனா வைரஸ் ப்ரேக்கிங் நியூஸ் - சங்கவி மயூரன் !

பகிர்வதற்கு

 

 

அழுத்துங்க..பாருங்க!

 

மின்னஞ்சலில் பதிவுகள்

மின்னஞ்சலில் பதிவுகள்