இந்தியா

இந்திய பாகிஸ்தான் படைகளுக்கிடையிலான மோதல் ஜம்மு காஷ்மீர் பகுதியில் நடைபெற்றுள்ளது.

ஜம்மு காஷ்மீரின் எல்லை கட்டுப்பாட்டு கோடு பகுதியில், பாகிஸ்தான் ராணுவத்தினர் ஊடுருவ முற்பட்டபோதே இத்தாக்குதல் தொடங்கியதாக இந்திய தரப்புச் செய்திகள் தெரிவிக்கின்றன.

பாகிஸ்தான் போர்நிறுத்த விதிகளை மீறித் தொடர்ந்து தாக்குதலில் ஈடுபட்டு வருவதாகவும், எதிர்தாக்குதலில் ஈடுபட்ட இந்திய ராணுவ வீரர்கள் 2 பேர் மரணம் அடைந்து உள்ளதாகவும் மேலும் அச் செய்திகள் தெரிவிக்கின்றன.

தொடரும் இத்தாக்குலில் சிக்கிய ஒரு பொது மகனும் பலியாகியுள்ளதாகவும் அறியவருகிறது.