இந்தியா

இன்றைய நாள் தேர்தல் நாள் எனச் சொல்லுமளவிற்கு, இந்தியாவின் பல இடங்களிலும் தேர்தல் வாக்குப் பதிவுகள் நடைபெறுகின்றன.

மராட்டியம், அரியானா மாநிலங்களின் சட்டசபை தேர்தல், தமிழ்நாடு நாங்குநேரி விக்கிரவான்டி, இடைத்தேர்தல் என்பவற்றுடன், உத்தரபிரதேசம் 11, குஜராத் 6, கேரளா 5, பீகார் 5, அசாம் 4, பஞ்சாப் 4, சிக்கிம் 3, ராஜஸ்தான் 2, இமாசலபிரதேசம் 2, புதுச்சேரி, தெலுங்கானா, மத்தியபிரதேசம், மேகாலயா, ஒடிசா, அருணாசலபிரதேசம்1, சத்தீஷ்கார் 1 ஆகிய மாநிலங்களில் உள்ள 51 சட்டசபை தொகுதிகளுக்கு இன்று இடைத்தேர்தல் நடைபெறுகிறது.

இன்று காலை ஆரம்பமாகிய, மராட்டியம் மற்றும் அரியானா சட்டமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவில் வாக்காளர்கள் ஆர்வமுடன் வாக்களித்து வருவதாகவும் தகவல்கள் தெரிவிக்கினறன.

கேரளாவில் நடைபெறும் 5 சட்டசபை தொகுதிகளுக்கான இடைத்தேர்தல்களக்கான வாக்குப்பதிவுகள் பலத்த மழை காரணமாக மந்தமாக இருந்ததாகவும் அறியவருகிறது.

தமிழகத்தில், நாங்குநேரி, விக்கிரவாண்டி மற்றும் புதுச்சேரி காமராஜ் நகர் ஆகிய 3 தொகுதிகளில் இடைத்தேர்தலுக்கான வாக்குச்சாவடிகளில் வாக்காளர்கள் ஆர்வமுடன் தங்களது வாக்குகளை செலுத்தி வருவதாகவும் தெரிய வருகிறது.