இந்தியா

தமிழகத்தில் பெரும் இயற்கைப் பேரிடராக வீசிய காஜா புயலால் பல மக்கள் வீடுகளை இழந்தனர், வாழ்வாதாரம் தொலைந்து போயினர்.

மிகக் கடுமையான பாதிப்புக்ககுள்ளான, நாகை மாவட்டம் கோடியக்கரை, தலைஞாயிறு பகுதிகளில் இவ்வாறு வீடிழந்த பத்துக் குடும்பங்களுக்கு புதிய வீடுகள் அமைத்துக் கொடுக்கப்படும் என சூப்பர் ஸ்டார் ரஜினிகாந் தரிசகர் மன்றத்தினரால் தெரிவிக்கப்பட்டிருந்தது.

அதற்கான பணிகளும் ஆரம்பமாகி, பத்து வீடுகளும் தலா 1.85 இலட்சம் பெறுமதியில் கட்டிமுடிக்கப்பட்டன. இமயமலை சென்று திரும்பிய சூப்பர் ஸ்டார் ரஜினிகாந், நாகை மாவட்ட ரஜினிகாந் ரசிகர் மன்றச் செயலாளர் ராஜேஸ்வரன் அவர்களது ஏற்பாட்டில், வீடுகளின் பயனாளர் குடும்பங்களை, சென்னை போயஸ் கார்ட்டன் இல்லத்திற்கு அழைத்து, உரையாடிய பின் ஒவ்வொருவரது இல்லத்திற்குமான சாவிகளை வழங்கினார்.