இந்தியா

கேரளாவின் பல மாவட்டங்களிலும் தொடர்ச்சியாகப் பெய்த்து வரும் கணமழையினைத் தொடர்ந்து, ஏழு மாவட்டங்களுக்கு ஆரஞ் அலர்ட்டினை விடுத்துள்ளது இந்திய வானிலை ஆய்வு மையம்.

திருவனந்தபுரம், ஆலப்புழா, கோட்டயம், இடுக்கி, மலப்புரம், எர்ணாக்குளம் மற்றும் பாலக்காடு ஆகிய ஏழு மாவட்டங்களுமே இவ்வாற ஆரஞ் அலர்ட் எச்சரிக்கை பெற்ற மாவட்டங்களாகும்.

கடந்த இருநாட்களாக இப்பகுதிகளில் பெய்து வரும் கனமழை மேலும் ஐந்து நாட்களுக்கு நீடிக்கலாம் எனப் பேரிடர் மேலாண்மை ஆணையம் கணித்துள்ளது. இதனால் இப்பகுதிகளில், வெள்ளம், நிலச்சரிவு, மின்னல் தாக்குதல், முதலான பேரிடர் அபாயங்கள் உள்ளதால், மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு இடம்பெயர வேண்டும் என மாவட்ட நிர்வாகங்கள் வலியுறுத்தியுள்ளன.

இதேவேளை பேரிடர் தொடர்பான போலிச் செய்திகளையும், படங்களையும், சமூகவலைதளங்களில் பரப்ப வேண்டாம் என்றும் பேரிடர் மேலாண்மை ஆணையம் வலியுறுத்தியுள்ளது.