இந்தியா

இரட்டையர்களான கே.ஸ்ரீ விசாகன் வயது 9 மற்றும் கே. ஸ்ரீஹரிணி வயது 9  சகோதர சகோதரியாக பிறந்த இரட்டையர்கள்.  6 வயது முதல் 9 வயது வரை கராத்தேவில் இரண்டு பிளாக் பெல்ட் மற்றும் இந்தியா மற்றும் சர்வதேச அளவில் அதிக பதக்கங்களை வாங்கி உலக சாதனை படைத்த சிறுவர்கள்.

இவர்களை சிறப்பிக்கும் விதமாக பட்டுக்கோட்டையில் நடந்த வசந்த் டிவியின் தீபாவளி சிறப்பு பட்டிமன்றத்தில் திரைப்பட நடிகை கஸ்தூரி அவர்களால் சாதனை குழந்தைகள் விருது வழங்கி கௌரவிக்கப்பட்டது

புதுச்சேரி மாநிலத்தை சேர்ந்த காரைக்காலில் உள்ள இன்டர்நேஷ்னல் வி.ஆர்.எஸ் மார்ஷியல் ஆர்ட்ஸ் அக்டமி இயக்குனர் மகாகுரு வி.ஆர்.எஸ் குமாரிடம் மூன்று வயது முதல் கராத்தே சிலம்பம் யோகா கிக் பாக்ஸிங் குபுடோ தேக்வாண்டோ போன்ற எண்னற்ற தற்காப்பு கலைகலை கற்று இந்தியா மற்றும் சர்வதேச அளவில் 200க்கும் மேற்பட்ட பதக்கங்களை வாங்கி புதுச்சேரி ஆளுநர் . முதல்வர் மற்றும் பல்வேறு தரப்பினரிடமும் பாராட்டை பெற்ற இவர்கள் காரைக்கால் குட்ஷெப்பட் மேல்நிலை பள்ளியில் 5ம் வகுப்பு பயின்று வருகின்றார்கள்.

வடக்கு – கிழக்கு உள்ளிட்ட தமிழ் மக்கள் அதிகமுள்ள பகுதிகளில் தடைப்பட்டுப் போன அபிவிருத்தித் திட்டங்கள் மீள ஆரம்பிக்கப்பட்டு துரிதப்படுத்தப்படும் என பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். 

அமைச்சரவை அமைச்சர்கள் 28 பேரும், இராஜாங்க அமைச்சர்கள் 40 பேரும் நாளை புதன்கிழமை பதவியேற்கவுள்ளனர். 

டெல்லி உச்சநீதிமன்றத்தால் பூர்வீக சொத்து உரிமையில் சம பங்கு பெண் பிள்ளைகளும் பெறலாம் எனும் தீர்ப்பை வரவேற்றுள்ளனர்.

இந்தியாவில் பருவமழை காலம் என்பதால் பவானிசாகர் மற்றும் மேட்டூர் அணைகளில் நீர்மட்டம் உயர்வடைந்து வருகிறது.

பசுபிக் பெருங்கடலில் நெருப்பு வளையப் பகுதியில் அமைந்த இந்தோனேசியா உலகில் நிலநடுக்கங்கள், சுனாமி மற்றும் எரிமலை போன்ற அனர்த்தங்கள் ஒரு வருடத்தில் அதிகளவில் ஏற்படும் நாடுகளில் ஒன்றாகும்.

அண்மையில் பெய்ரூட்டில் நடந்த வெடி விபத்தை அடுத்து லெபனானில் வெடித்த மக்கள் புரட்சியின் விளைவாக லெபனான் அரசின் பிரதமரான தானும், அமைச்சரவையும் பதவி விலகுவதாக அந்நாட்டு பிரதமர் ஹசன் தியாப் தொலைக் காட்சியில் அறிவித்துள்ளார்.