இந்தியா

த்மிழகத்தில் செவ்வாய்க்கிழமை தேனி, திண்டுக்கல், நீலகிரி மற்றும் கோவை ஆகிய 4 மாவட்டங்களில் கனமழை பெய்யும் என அதிகபட்ச சிவப்பு நிற எச்சரிக்கை விடுக்கப் பட்டுள்ளது.

ஆக்டோபர் 16 முதல் தென்னிந்தியாவின் தமிழக, கர்நாடக மற்றும் கேரளா மாநிலங்களில் வடகிழக்கு பருவ மழை பெய்து வருகின்றது.

இதனால் இந்த மாநிலங்களின் கரையோரப் பகுதிகளில் மிக அதிக கனமழை பெய்யும் என்றும் எச்சரிக்கப் பட்டுள்ளது. முக்கியமாக புதுச்சேரி மற்றும் காரைக்காலில் கனமழை பெய்யவுள்ளது. தென் தமிழகத்தினதும், குமரிக் கடலினதும் ஒட்டிய பகுதியில் வளி மண்டல மேலடுக்குச் சுழற்சியும், அரபிக் கடலில் குறைந்த காற்றழுத்தத் தாழ்வும் நிலவுகின்றது.

இதனால் இன்னும் இரு நாட்களுக்கு கன்னியாகுமரி, நெல்லை, தூத்துக்குடி, ராமநாதபுரம், திருவள்ளூர், நீலகிரி, கோவை, கடலூர், விழுப்புரம், திருவண்ணாமலை, வேலூர், சேலம், மதுரை, தேனி, ஈரோடு, திருப்பூர், திண்டுக்கல் போன்ற மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் மிக அதிக கனமழைக்கு வாய்ப்புள்ளது என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.