இந்தியா

ஐஎன்எக்ஸ் மீடியா ஊழல் தொடர்பில் சிபிஐ யினால் தொடரப்பட்ட வழக்கு விசாரணைகளுக்காக, முன்னாள் அமைச்சர் ப.சிதம்பரம், ஆகஸ்ட் 21-ஆம் திகதி சிபிஐ அதிகாரிகளால் கைது செய்யப்பட்டிருந்தார்.

டெல்லி திகார் சிறையில் அடைக்கப்பட்டிருந்த அவர், ஜாமீன் வழங்கக் கோரி, டெல்லி உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். உயர்நீதிமன்றம் அவரது மனுவை நிராகரிக்க, உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார். இந்த மேன்முறையீட்டு வழக்கு இன்று விசாரணைக்கு எடுத்து விசாரித்த நீதிபதிகள், வழக்கு விசாரணைக்கு முழுமையாக ஒத்துழைக்க வேண்டும் எனவும், வெளிநாடு செல்லக் கூடாது எனவும் கூறி, நிபந்தனை ஜாமீன் வழங்கி உத்தரவிட்டுள்ளனர்.

ஆயினும் இன்று கிடைத்துள்ள ஜாமீனில் ப.சிதம்பரம் வெளியே வரமுடியாத சட்டச் சிக்கல் ஒன்றுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. சிபிஐ தவிர அமலாக்கத்துறையும் வழக்குப்பதிவு செய்துள்ளதால், இந்த வழக்கிலிருந்தும் ஜாமீன் கிடைத்தாலே அவரால் சிறையில் இருந்து வெளியே வரமுடியும் எனவும் கருதப்படுகிறது.

ஒன்பதாவது பாராளுமன்றத்துக்காக இடம்பெற்ற தேர்தலில், வன்னித் தேர்தல் மாவட்டத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு (தமிழரசுக் கட்சி) 3 ஆசனங்களை வென்றுள்ளது. 

ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவரும், முன்னாள் பிரதமருமான ரணில் விக்ரமசிங்க பொதுத் தேர்தலில் தோல்வியுற்றுள்ளார். 

கொரோனா பெருந்தொற்று உலகளவில் அதிகரித்து வரும் நிலையில் நேற்று இந்தியாவில் இந்நோய் பாதித்தவர்களின் எண்ணிக்கை
19.64 லட்சத்தை தாண்டியுள்ளது.

இந்தியாவின் சென்னை சேமிப்பு கிடங்கில் உள்ள அமோனியம் நைட்ரரேட் வெடிமருந்தை பாதுகாப்பா அப்புறப்படுத்த வேண்டும் என பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.

சுவிற்சர்லாந்து மற்றும் பிரான்சிலிருந்து நோர்வே வரும் பயணிகள் அனைவரும் தனிமைப்படுத்தப்படுவார்கள் என நோர்வே அரசு அறிவித்துள்ளது.

லெபனான் துறைமுகத்தில் அமோனியம் நைட்ரெட் வெடித்ததில் 73பேர் பலியாகியுள்ளனர்.