இந்தியா

அதிக மக்கள் பார்ப்பதற்காகச் செய்திகளில் பரபரப்பை ஏற்படுத்தி, விளம்பரதாரர்களைக் கவர வேண்டும் எனும் குறுகிய இலாப நோக்கப் பார்வையில், செயற்படக் கூடாது என தமிழக முத்லவர் தெரிவித்துள்ளார்.

நன்றாக ஆராய்ந்து களத்தின் உண்மைத் தன்மையை வெளிக் கொணர்வதே ஊடகங்களின் தார்மீக கடமையென சென்னையில் நடைபெற்ற தனியார் தொலைக்காட்சிச் சேவையான நியூஸ் 7 நடாத்திய விருது விழாவில் கலந்து கொண்டு பேசுகையிலேயே தமிழக முதலமைச்சர் எடப்பாடிப் பழனிச்சாமி  இவ்வாறு தெரிவித்தார்.

ஊடகத்தின் மூலம் கல்வியறிவு பெறாத மக்களும் செய்திகளை கண்ணால் பார்த்து, காதால் கேட்டுப் புரிந்து கொள்ள முடிகிறது. அவ்வாறான வலிமை மிகு ஊடககங்கள், மக்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும். தொலைக்காட்சிகள் மூலம் ஒளிபரப்பாகும் செய்திகளுக்கு மக்களிடையே அதிக நம்பகத்தன்மை உள்ளது. இதனைப் பொறுப்புணர்வோடு நோக்கி, தனி மனித சுதந்திரம், மற்றும் மனித விழுமியங்கள் பாதிப்புறாத வண்ணம், நிகழ்ச்சிகளை ஒளிபரப்புச் செய்ய வேண்டும்.