இந்தியா

வங்கிகளில் பெருந் தொகைகள் கடன் பெற்று விட்டு, திரும்பச் செலுத்தாமல் முறைகேடு செய்பவர்கள் குறித்து சிபிஐ, அமலாக்கத்துறை கடும் நடவடிக்கை எடுக்கத் தொடங்கியுள்ளது. இது தொடர்பாக நாடு முழுவதுமாக நூற்றுக்கும் அதிகமான இடங்களில் அதிரடிச் சோதனைகளை நடத்தி வருவதாக அறிய வருகிறது.

வங்கி முறைகேடு சம்பவங்கள் பலவற்றில் வங்கி அதிகாரிகளே உடந்தையாக இருந்தமை தொடர்பாகவும் புகார்கள் எழுந்துள்ளன. வங்கி மோசடிகள் தொடர்பில் சிபிஜ தொடுத்திருக்கும் பல்வேறு வழக்குகள் தொடர்பிலேயே இந்த அதிரடிச் சோதனையை சிபிஜ ஆரம்பித்துள்ளதாகவும் அறிய வருகிறது.

பல்லாயிரக்கணக்கான கோடி ரூபாய்களை கடன் வாங்கி, முறையாக திருப்பி செலுத்தாமல், வெளிநாட்டிற்கு தப்பியோடிய கிங் பிஷர் விஜய் மல்லையா, நிரவ் மோடி மற்றும் உள்ளிட்டவர்கள் மீதும் வங்கி மோசடி வழக்குகள் நடத்தப்பட்டு வருகின்றன. இவை தொடர்பில் அவர்கள் மறைந்து வாழும் நாடுகளிலிருந்து இந்தியாவிற்கு நாடு கடத்தவும் இந்தியா சார்பில் கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.