இந்தியா
Typography

நடிகர் விஜய் சேதுபதி தனியார் ஆன்லைன் விற்பனை நிறுவனம் ஒன்றின் விளம்பரத்தில் நடித்தமை தொடர்பில் வணிகர் சங்கம் தனது கடும் கண்டனத்தைத் தெரிவித்துள்ளது.

தமிழ்நாடு அனைத்து வணிகர் சங்கங்களின் பேரமைப்பு, ஆன்லைன் வர்த்தகம் தொடர்பிலான செயற்பாடுகளுக்கு, கடும் கண்டனங்களைத் தொடர்ச்சியாகத் தெரிவித்து வருகிறது. இந்நிலையில் இன்று சென்னை ஆழ்வார் திருநகரில் உள்ள விஜய் சேதுபதியின் அலுவலகத்தை அவர்கள் முற்றுகையிட முயன்றனர்.

சாலையில் பேரணியாக திரண்ட அந்த அமைப்பினர், விஜய் சேதுபதிக்கு எதிராக கோஷங்களை எழுப்பியவாறு விஜய் சேதுபதியின் அலுவலகத்தை முற்றையிட முயன்றனர். அவர்களது முற்றுகையைத் தடுத்து நிறுத்திய காவல்துறையினர், இப் போராட்டத்தில் ஈடுபட்டவர்களைக் கைது செய்துள்ளதாகத் தெரியவருகிறது.

விஜய் சேதுபதியின் அரசியல் ரீதியான கருத்துக்கள் தொடர்பில், அவர் தொடர்ச்சியாகக் கண்காணிக்கப்பட்டு வருகின்றார் என்றொரு தகவலும் ஏற்கனவே வெளியாகியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

BLOG COMMENTS POWERED BY DISQUS

பகிர்வதற்கு

 

 

மின்னஞ்சலில் பதிவுகள்

மின்னஞ்சலில் பதிவுகள்