இந்தியா
Typography

டெல்லியில் அண்மைக் காலமாக காற்று மாசு மிகவும் அதிகரித்து வருகின்றது. இதனால் கருவில் இருக்கும் குழந்தைக்குக் கூடப் பாதிப்பு ஏற்படும் என்று கூறப்படுகின்றது.

எனவே டெல்லியில் பொது சுகாதார அவசர நிலை பிறப்பிக்கப் பட்டுள்ளது. காற்று மாசில் இருந்து தம்மைப் பாதுகாத்துக் கொள்ள முகமூடி அணிந்து கொள்வதோ அல்லது வீட்டுல் சுத்திகரிப்பு இயந்திரம் வைத்துக் கொள்வதோ 2 ஆம் கட்ட உதவியாகத் தான் இருக்கும் என்றும் முடிந்தவரை வெளியில் அதிகம் செல்லாது இருப்பது நல்லது என்றும் மருத்துவர் மகிழ்மாறன் தெரிவித்துள்ளார்.

காற்றில் உள்ள தூசியின் அளவு 100 முதல் 200 இற்குள் இருந்தாலே குழந்தைகள் மற்றும் வயதானவர்களுக்குப் பாதிப்பு என்ற நிலையில் டெல்லியில் காற்று மாசின் அளவு 400 இற்கும் அதிகமாக உள்ளது. எனவே பள்ளிகள் சில மூடப் பட்டுள்ளன மேலும் விமானப் போக்குவரத்தும் சற்றுத் தடைப்பட்டுள்ளது. இந்த மாசுபட்ட தூசியைத் தொடர்ந்து சுவாசித்தால் ஆரோக்கியமானவர்களுக்கும் நுரையீரல் பாதிப்பு ஏற்படுமாம். ஆஸ்துமா நோயாளிகளுக்கு மேலும் சிக்கல் உள்ளதாம். இதேவேளை டெல்லியில் நிலவும் காற்று மாசு காரணமாக தமிழகத்துக்கு எந்தவித பாதிப்பும் இல்லை என்றும் கூறப்பட்டுள்ளது.

மேலும் காற்று மாசு அபாயத்தைக் கட்டுப்படுத்த டெல்லியில் நீதிமன்ற உத்தரவின் அடிப்படையில் அங்கு வாகனக் கட்டுப்பாடு அமுலுக்கு வந்துள்ளது. இதுதவிர டெல்லி உயர் நீதிமன்றம் விவசாயிகள் தங்கள் தேவைக்காக வைக்கோலை எரிக்கவும் தடை விதித்ததுடன் மீறினால் ஒரு இலட்சம் அபராதம் எனவும் தீர்ப்பு வழங்கியுள்ளது. மேலும் காற்று மாசை அதிகரிக்கும் டீசல் ஜெனரேட்டர்களுக்கும் தடை விதிக்கப் பட்டுள்ளது.

BLOG COMMENTS POWERED BY DISQUS

பகிர்வதற்கு

 

 

மின்னஞ்சலில் பதிவுகள்

மின்னஞ்சலில் பதிவுகள்