இந்தியா

அரபிக் கடல் பகுதியில் உருவாகியிருந்த மஹா புயல் நாளை வியாழக்கிழமை குஜராத் அருகே கரையைக் கடக்கவுள்ள நிலையில் அந்தமான் தீவுப் பகுதி அருகே புதிய காற்றழுத்தத் தாழ்வு நிலை உருவாகியுள்ளது.

இந்த காற்றழுத்தம் வலுவான புயலாக மாறும் என சென்னை வானிலை மையம் கணித்துள்ளது. இதனால் அந்தமான் பகுதியில் மத்திய கிழக்கு வங்கக் கடல், தென் கிழக்கு வங்கக் கடல், மத்திய வங்கக் கடல் மற்றும் வடக்குக் கடல்களில் மீனவர்கள் மீன்பிடிக்கச் செல்ல வேண்டாம் என எச்சரிக்கப் பட்டுள்ளது.

ஆயினும் அடுத்த 24 மணித்தியாலத்துக்கு தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி அருகே வறண்ட வானிலை நிலவும் எனவும் வெப்பச் சலனம் காரணமாக தென் தமிழ்நாட்டின் கடலோரப் பகுதிகளில் மிதமான மழை பெய்யக் கூடும் எனவும் எதிர்வு கூறப்பட்டுள்ளது.