இந்தியா
Typography

தகவல் தொழில் நுட்பக் காலம் இது. இந்த நுட்பத்தை சிறப்பாகவும், அதிகமாகவும், பயன்படுத்தும் மாநிலங்களில் தமிழகம் முதலிடத்தில் உள்ளது. தமிழகத்தின் முதலீட்டு வளமாக மாறியுள்ள, தகவல் தொழில்நுட்ப துறையில் ஆட் குறைப்பு நடவடிக்கைகளை எடுக்கக் கூடாது எனத் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி கூறியுள்ளார்.

சர்வதேச தகவல் மற்றும் தொலைத்தொடர்பு சாதனத் துறை தொடர்பான இருநாள் மாநாட்டினைச் சென்னையில் தொடக்கி வைத்து பேசுகையிலேயே அவர் மேற்கண்டவாறு கூறினார். அவர் மேலும் தனதுரையில்;

சென்ற ஆண்டில் தமிழகத்தில் முதலீடு செய்யவதற்கு வருமாறு தொழில் அதிபர்களுக்கு விடுத்த என்னுடைய வேண்டுகோளை ஏற்று தமிழகத்தில் முதலீடு செய்துள்ள, முதலீடு செய்ய முன்வரும் தொழிற்துறையினருக்கு நன்றி. எமது அரசு முதலீட்டாளர்களை இருகரம் நீட்டி அழைக்கும் அரசாக தமிழக அரசு இருக்கிறது.

சென்ற ஆண்டில் மட்டும், 6 ஆயிரத்து 500 கோடி முதலீடுகள் தமிழகத்தில் செய்யப்பட்டுள்ளன. புதிய தொழில்நுட்ப நிறுவனங்களும், மிகப் பிரபலமான பெரிய நிறுவனங்களின் கிளைகளும் சென்னையில் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. இதனால் தமிழகத்தில் சுமார் அறுபது ஆயிரம் பேருக்கு வேலைவாய்ப்பு கிடைத்துள்ளது. இந்நிலையில் தகவல் தொழில்நுட்ப துறையில் ஆட் குறைப்பு நடவடிக்கைகளை, நிறவனங்கள் எடுக்கக் கூடாது எனக் கேட்டுக் கொண்டார்.

BLOG COMMENTS POWERED BY DISQUS

பகிர்வதற்கு

 

 

மின்னஞ்சலில் பதிவுகள்

மின்னஞ்சலில் பதிவுகள்