இந்தியா

சர்ச்கைக்குரிய அயோத்தி வழக்கின் தீர்ப்பு வெளியாகவுள்ளது. இந் நிலையில், இவ் வழக்குத் தொடர்பாக அமைச்சர்கள் எவரும், உணர்வுகளை தூண்டும் கருத்துகளை வெளியிடக்கூடாது பிரதமர் மோடி அறிவுறுத்தியுள்ளதாகத் தெரிய வருகிறது.

டெல்லியில் நேற்று நடைபெற்ற மத்திய அமைச்சரவை கூட்டத்தில் கலந்து கொண்ட போதே பிரதமர் மோடி மேற்கண்டவாறு தெரிவுத்துள்ளதாக அறிய வருகிறது.,அயோத்தி வழக்கின் தீர்ப்பு எவ்வாறிருந்தாலும் அதனை ஏற்றுக்கொள்ளவேண்டும் . நாட்டில் அமைதியை பேண வேண்டியது ஒவ்வொருவரின் பொறுப்பு. தேவையற்ற விதத்தில் உணர்வுகளைத் துர்ண்டும் வகையில் கருத்துக்கள் கூறக் கூடாது என அமைச்சர்களிடம் பிரதமர் மோடி வலியுறுத்தியுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.