இந்தியா

ராஜீவ் காந்தி கொலை வழக்குத் தொடர்பில், வேலூர் மத்திய சிறையிலுள்ள பேரறிவாளனுக்கு ஒரு மாதம் பரோல் வழங்கப்பட்டிருப்பதாக தகவல்கள் வெளிவந்துள்ளன.இதற்கான உத்தரவினை தமிழக அரசு அளித்திருப்பதாகவும் அறிய வருகிறது.

பேரறிவாளனின் தந்தையினது உடல்நிலையை கருத்தில் கொண்டு இந்தப் பரோல் வழங்கப்பட்டிருப்பதாகவும், வரும் திங்கள் முதல் அடுத்து வரும் முப்பது நாட்களுக்கு இப் பரோல் வழங்கப்பட்டுள்ளதாகவும் அறிய வருகிறது.