இந்தியா

திருவள்ளுவருக்கு காவி சாயம் பூசியது போல எனக்கும் பாஜக சாயம் பூச முயற்சிகள் நடப்பதாக உணர்கிறேன் என நடிகர் ரஜினிகாந் தெரிவித்துள்ளார்.

இன்று காலை செய்தியாளர்களைச் சந்தித்த போதே ரஜினிகாந் இவ்வாறு மனந் திறந்து பேசினார். அவர் மேலும் பேசுகையில், நான் எப்போதும் வெளிப்படையாக பேசி வருபவன். திருவள்ளுவருக்கு காவி சாயம் பூசிய விவகாரத்தை ஊடகங்கள் பெரிதாக்கின. அதுபோலவே எனக்கும் பாஜக சாயம் பூசச் சிலர் நினைக்கிறார்கள்.

அரசியலில் இது சகஜம்தான். அவர்கள் அவ்விதமாக நினைக்கலாம். அது தவறும் அல்ல. ஆனால் இறுதியாக முடிவெடுக்க வேண்டியது நான்தானே. தமிழகத்தில் ஆளுமையான தலைமைக்கான வெற்றிடம் இப்போதும் இருக்கிறது.

கட்சி தொடங்கும் வரை சினிமாவில் நடிப்பேன். புரட்சி த்தலைவர் எம்.ஜி.ஆர் முதல்வராகும் வரை தொடர்ந்து படங்களில் நடித்தார் என்பதை நாம் நினைவில் கொள்ளலாம். அயோத்தி வழக்கில் தீர்ப்பு எப்படி வந்தாலும் மக்கள் அமைதி காக்க வேண்டும் என்பதெ எனது வேண்டுகோள் என்றார்.