இந்தியா
Typography

தமிழகத்தில் அரசியற் தலைமை வெற்றிடமாகவே உள்ளது எனும் ரஜினிகாந்தின் கூற்றுக்கு, ஸ்டாலினால் தலைமை வெற்றிடம் நிரம்பிப் பலநாட்களாயிற்று என திமுக பொருளாளர் துரைமுருகன் கூறியுள்ளார்.

செய்தியாளர்கள் சந்திப்பில் திமுக பொருளாளர் துரைமுருகன் இது தொர்பில் கூறுகையில், தொடர்ந்து அரசியற் களத்தில் இல்லாமையால், அந்த இடம் ஸ்டாலினால் நிரப்பியதை ரஜினி உணர்ந்திருக்க மாட்டார். எப்போது ரஜினி நேரடி அரசியலுக்கு வருகிறாரோ அப்போது அதை அவர் உணர்வார்.

வெற்றிடம் எங்கு காணப்பெற்றாலும், காற்று அந்த இடத்தை நிரப்பிவிடும் என்பது விஞ்ஞானம். தமிழகத்தில் ஏற்பட்ட வெற்றிடத்தை ஸ்டாலின் என்ற காற்று நிரப்பிப் பலநாட்கள் ஆகிவிட்டது. எனக் கூறியுள்ளார் என அறிய வருகிறது.

BLOG COMMENTS POWERED BY DISQUS

பகிர்வதற்கு

 

 

மின்னஞ்சலில் பதிவுகள்

மின்னஞ்சலில் பதிவுகள்