இந்தியா

அயோத்தி நிலம் இந்து அமைப்புக்களே உரியது என, வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த அயோத்தி மேல்முறையீட்டு வழக்கில் உச்ச நீதிமன்றம் இன்று காலை தீர்ப்பு வழங்கியுள்ளது.

ஐந்து நீதிபதிகளும் ஒருமித்தளிக்கும் தீர்ப்பாக இது அமைகிறது என தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் தெரிவித்து இவ்வழக்கின் தீர்ப்பினை வாசித்துள்ளார்.

தீர்ப்பின் சாராம்சத்தில், சர்ச்சைக்குரிய 2.77 ஏக்கர் நிலத்தை இந்து அமைப்புகளிடமே வழங்க வேண்டும். அயோத்தியில் இஸ்லாமியர்கள் தொழுகை நடத்த மாற்று இடம் வழங்கப்படும். வக்பு வாரியம் ஏற்கும் இடத்தில் 5 ஏக்கர் நிலம் தர மத்திய அரசு மற்றும் உ.பி அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவு. பாபர் மசூதி இருந்த இடம் தங்களுடையது என்பதை இஸ்லாமிய அமைப்புகள் நிரூபிக்கவில்லை. அயோத்தியில் ராமர் பிறந்ததாக இந்து சாஸ்திரங்கள் கூறுகின்றன. ஆங்கிலேயர்கள் வருவதற்கு முன்னதாகவே ராமர் மற்றும் சீதையை இந்துக்கள் வழிபட்டதற்கான ஆதாரம் உள்ளது என தலைமை நீதிபதி குறிப்பிட்டார்.

பாபர் மசூதி வழக்கில் ஷியா மற்றும் வக்பு வாரிய அமைப்புகளின் மனுக்கள் தள்ளுபடி செய்வதாகவும் உச்ச நீதிமன்றம் அறிவித்தது.
இந்த வழக்கின் தீர்ப்பு இன்று வெளியாவதை முன்னிட்டு நாடு முழுவதும் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. குறிப்பாக உச்சநீதிமன்ற வளாகம், மற்றும் முக்கிய இடங்களில் 144 தடையுத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

வழக்கின் தீர்ப்பு வெளியானதைத் தொடர்ந்து, சன்னி வக்பு வாரிய வழக்கறிஞர் ஜாபர்யாப் ஜிலானி செய்தியாளர்களிடம்; உச்ச நீதிமன்ற தீர்ப்பினை நாங்கள் மதிக்கின்றோம். ஆனால் அதில் எங்களுக்கு திருப்தியில்லை. அடுத்து என்ன செய்வது என்பது பற்றி யோசிப்போம் எனத் தெரிவித்துள்ளார்.

இவ் வழக்கின் தீர்ப்பு வெளியாவதை முன்னிட்டு நாடு முழுவதும் உச்சக்கட்ட உஷார் நிலையில் வைக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கைத் தொழிலாளர் காங்கிரசின் தலைவரும், அமைச்சருமான ஆறுமுகம் தொண்டமான் (வயது 56) சற்றுமுன்னர் (இன்று செவ்வாய்க்கிழமை) காலமானார். 

எதிர்வரும் பொதுத் தேர்தலின் பின்னர், ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமையகமான சிறிகொத்தாவை கைப்பற்றப்போவதாக சஜித் பிரேமதாச தலைமையிலான ஐக்கிய மக்கள் சக்தி அறிவித்துள்ளது. 

தமிழகத்தில் உள்ள பள்ளிகள் காலதாமதமாக திறப்பதால் பாடங்களை குறைக்கத் திட்டமிட்டு உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

தமிழகத்தில் இன்று ஒரே நாளில் கொரோனா தொற்று பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 646 ஆகவும், பலியானவர்களின் எண்ணிக்கை 127 ஆகவும் உயர்ந்துள்ளது. அதிகம் பாதிக்கப்பட்ட மாவட்டங்களில் சென்னை முதலிடம் பிடித்துள்ளது.

Worldometers இணையத் தளத்தின் அதிகாரப்பூர்வ சமீபத்திய தகவல் படி உலகம் முழுதும் 213 நாடுகளில் பரவியிருக்கும் கோவிட்-19 என்ற கொரோனா வைரஸ் தொற்று தொடர்பான முக்கிய புள்ளி விபரம் கீழே :

இந்திய சீன எல்லையான லடாக்கில் மேலும் ஆயிரக் கணக்கான வீரர்களைக் குவித்தும், போர் விமானங்களைத் தரித்தும் வருவதால் சீனா இந்தியா இடையே போர்ப் பதற்றம் அதிகரித்துள்ளது.