இந்தியா

வெற்றிடம் பற்றிச் சிலர் பேசுகின்றார்கள். அதிமுகவில் வெற்றி இருக்கிறதே தவிர வெற்றிடம் ஏதும் இல்லை என அதிமுகவின் பொதுக்குழுக் கூட்டத்தில் உரையாற்றிய துணைமுதல்வர் ஓ.பன்னீர்செல்வம் குறிப்பிட்டார்.

அவர் அங்கு மேலும் பேசுகையில், இந்திய அரசியல் வரலாற்றில் , 29 ஆண்டு காலம் தமிழகத்தை ஆளுகின்ற ஒரே கட்ச,அ.தி.மு.க.

ஜெயலலிதா மறைவின் பின் அழிந்து விடும் எனப் பேசப்பட்ட நம் இயக்கத்தை, விசுவாசமிக்க ஒன்றரைக் கோடி தொண்டர்கள் தங்களது மூன்று கோடி கரங்களால் அரண் எழுப்பிப் பாதுகாத்து வருகின்றனர். இந்த மூன்று கோடி கரங்களும் ஒன்றிணைந்து எதிர்வரும் தேர்தல்களில், எதிரிகளையும், துரோகிகளையும் கலங்கடிப்போம் என்பது உறுதி.

நல்லாட்சிக்கு இலக்கணமாக திகழும் அதிமுக உ;ளாட்சித் தேர்தலில் நிச்சயம் வெற்றி பெறும். இருவிரல் புரட்சி நிச்சயம் ஏற்படும் எனக் குறிப்பிட்டார்.

ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமைப் பதவியிலிருந்து ரணில் விக்ரமசிங்க விலகுவதற்கான அறிவிப்பினை விடுத்துள்ளார். 

எமது கொள்கைகளை ஐக்கிய தேசியக் கட்சி ஏற்றுக்கொண்டால், எதிர்வரும் காலங்களில் இணைந்து பணியாற்றத் தயாராக இருப்பதாக ஐக்கிய மக்கள் சக்தி அறிவித்துள்ளது. 

இந்தியாவின் முன்னாள் ஜனாதிபதி பிரணாப் முகர்ஜிக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டிருப்பதாக தெரிவிக்கப்படுகிறது.

ஆந்திர மாநிலத்தில் கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க சிகிச்சை மையமாக இருந்த ஓட்டல் ஒன்றில் ஏற்பட்ட தீ விபத்தில் 10பேர் பலியாகியிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

பெய்ரூட்டில் ஏற்பட்ட மிகப்பெரும் நைட்ரஜன் வெடிவிபத்தில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 200 ஆக உயர்வடைந்துள்ளது.

சுவிற்சர்லாந்தில் கோடைவிடுமுறை முடிந்து பாடசாலைகளுக்கான புதிய கல்வியாண்டு ஆரம்பமாகவுள்ளன. சுவிஸின் சில மாநிலங்களில் வரும் திங்கட்கிழமை பள்ளிகள் தொடங்குகின்றன.