இந்தியா

தேவேந்திர பட்னாவிஸ் தலைமையிலான மகாராஷ்டிராவின் புதிய அரசுக்கு எதிராக சிவசேனா, தேசிவாத காங்கிரஸ், காங்கிரஸ் கூட்டாகத் தொடர்ந்த வழக்கு, உச்சநீதிமன்றத்தில் இன்று காலை மீண்டும் விசாரணைக்கு வந்தது.

அப்போது, ஆளுநர் தரப்பால், பெரும்பான்மை எம்எல்ஏ க்களின் ஆதரவு இருப்பதாக தேவேந்திர பட்னாவிஸ் ஆளுநரிடம் கடிதம் சமர்ப்பிக்கப்பட்டதாகவும், அதனைத் தொடர்ந்தே அவர் ஆட்சி அமைக்க அழைக்கப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டது.

புதிய அரசுக்கு அரசுக்கு 170 எம்எல்ஏக்களின் ஆதரவு உள்ளதாக உச்சநீதிமன்றத்தில் பாஜக தரப்பில் தெரிவிக்கபட்டது. புதிய அரசின் பெரும்பான்மையை நிரூபிக்க அவகாசம் அளிக்கப்பட வேண்டும் எனவும் கோரப்பட்டது. காங்கிரஸ் தரப்பில் வாதிட்ட வழக்கறிஞர் இதற்கு மறுப்புத் தெரிவித்து, அரசு தனது பெரும்பான்மையை உடனடியாக நிரூபிக்க உச்சநீதிமன்றம் உத்தரவிட வேண்டும் எனவும் கேட்டுக்கொண்டார். வாதங்களைக் கேட்டுக் கொண்ட நீதிபதிகள், வழக்கின் தீர்ப்பு நாளை காலை 10.30 மணிக்கு ஒத்தி வைத்துள்ளனர்.

இதேவேளை மகாராஸ்டிரா விவகாரம், மத்தியில் மக்களவை, மாநிலங்களவைக் கூட்டத் தொடரில் இன்று எதிரொலித்தது. மகாராஷ்டிராவில் பாஜக ஜனநாயகப் படுகொலை புரிந்துள்ளதாகச் சொல்லிக் கூச்சல் எழுப்பினார்கள். இதனால் பிற்பகல் வரை இரு அவைகளும் ஒத்தி வைக்கப்பட்டன. பிற்பகலிலுலம் சபைகளில் இதே பிர்ச்சனை மீண்டும் எழுந்ததைத் தொடர்ந்து இரு சபைளும் நானை வரை ஒத்தி வைக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தலைமையிலான புதிய அரசாங்கத்தின் 26 பேரடங்கிய அமைச்சரவை தற்போது (இன்று புதன்கிழமை) பதவியேற்று வருகின்றது. 

மாவட்டச் செயலகங்கள் மற்றும் பிரதேச செயலகங்களை பாதுகாப்பு அமைச்சின் கீழ் கொண்டு செல்வதானது, நாட்டின் முழு நிர்வாகத்தையும் இராணுவத்தின் பிடிக்குள் கொண்டு செல்வதற்கு ஒப்பானது என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளர் எம்.ஏ.சுமந்திரன் குற்றஞ்சாட்டியுள்ளார். 

டெல்லி உச்சநீதிமன்றத்தால் பூர்வீக சொத்து உரிமையில் சம பங்கு பெண் பிள்ளைகளும் பெறலாம் எனும் தீர்ப்பை வரவேற்றுள்ளனர்.

இந்தியாவில் பருவமழை காலம் என்பதால் பவானிசாகர் மற்றும் மேட்டூர் அணைகளில் நீர்மட்டம் உயர்வடைந்து வருகிறது.

பசுபிக் பெருங்கடலில் நெருப்பு வளையப் பகுதியில் அமைந்த இந்தோனேசியா உலகில் நிலநடுக்கங்கள், சுனாமி மற்றும் எரிமலை போன்ற அனர்த்தங்கள் ஒரு வருடத்தில் அதிகளவில் ஏற்படும் நாடுகளில் ஒன்றாகும்.

அண்மையில் பெய்ரூட்டில் நடந்த வெடி விபத்தை அடுத்து லெபனானில் வெடித்த மக்கள் புரட்சியின் விளைவாக லெபனான் அரசின் பிரதமரான தானும், அமைச்சரவையும் பதவி விலகுவதாக அந்நாட்டு பிரதமர் ஹசன் தியாப் தொலைக் காட்சியில் அறிவித்துள்ளார்.