இந்தியா

சபரிமலை வரும் அனைத்து வயதுப் பெண்களுக்கும் பாதுகாப்புத் தரமுடியாது. நீதிமன்ற அனுமதியுடன் வரும் பெண்களுக்கு மட்டுமே பாதுகாப்பு தர முடியும், என கேரள அரசு தெரிவித்துள்ளது.

ஆனாலும், சபரிமலை செல்ல முயற்சித்த வயது வரம்புக்குட்பட்ட பெண்களை, முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக திருப்பி அனுப்பியது காவல்துறை.

மேலும் சபரிமலை புரட்சி செய்யும் இடமல்ல, ஐயப்ப பக்தர்களின் பக்திநிலைக்கு குந்தகம் விளைவிக்கும் நோக்கில் வரவேண்டாம் எனவும் அறிவிக்கப்பட்ட நிலையில், சபரிமலை ஐயப்பன் கோவில் செல்வதற்காக சமூக ஆர்வலர் திருப்தி தேசாய் கொச்சின் வருகை தந்துள்தாக அறிய வருகிறது.

ஏழு பேர் பேர் கொண்ட குழுவாக கொச்சி விமான நிலையம் வந்துள்ள இவர்கள், கோட்டயம் வழியாக சபரிமலை செல்ல திட்டமிட்டுள்ளதாகவும், சபரிமலை செல்ல அனுமதி மறுக்கப்பட்டால், நீதிமன்றத்தை நாட இருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

சபரிமலை செல்வது குறித்து ஏற்கனவே, கேரளமுதல்வர், மற்றும் டிஜிபிக்கு தகவல் தெரிவித்துவிட்டேன். ஆகவே எமக்குரிய பாதுகாப்பினைத் தர வேண்டியது அவர்களின் கடமை எனக் கூறிய அவர், கொச்சின் காவல் ஆணையர் அலுவலகத்தில் சபரிமலை செல்ல பாதுகாப்பு அளிக்க வேண்டி முணு அளித்துள்ளதாகத் தெரிய வருகிறது.

இன்று அரசியலமைப்பு தினம். நீதிமன்றத் தீர்ப்பின் பிரகாரம், எனக்காக உரிமையினை வழங்கவேண்டியது கேரள அரசினதும் காவல்துறையினதும் கடமை. அது மறுக்கப்பட்டால் அவர்கள் மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்குத் தொடர்வேன் என அவர் எச்சரித்துள்ளதாகவும் அறிய வருகிறது.

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தலைமையிலான புதிய அரசாங்கத்தின் 26 பேரடங்கிய அமைச்சரவை தற்போது (இன்று புதன்கிழமை) பதவியேற்று வருகின்றது. 

மாவட்டச் செயலகங்கள் மற்றும் பிரதேச செயலகங்களை பாதுகாப்பு அமைச்சின் கீழ் கொண்டு செல்வதானது, நாட்டின் முழு நிர்வாகத்தையும் இராணுவத்தின் பிடிக்குள் கொண்டு செல்வதற்கு ஒப்பானது என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளர் எம்.ஏ.சுமந்திரன் குற்றஞ்சாட்டியுள்ளார். 

டெல்லி உச்சநீதிமன்றத்தால் பூர்வீக சொத்து உரிமையில் சம பங்கு பெண் பிள்ளைகளும் பெறலாம் எனும் தீர்ப்பை வரவேற்றுள்ளனர்.

இந்தியாவில் பருவமழை காலம் என்பதால் பவானிசாகர் மற்றும் மேட்டூர் அணைகளில் நீர்மட்டம் உயர்வடைந்து வருகிறது.

பசுபிக் பெருங்கடலில் நெருப்பு வளையப் பகுதியில் அமைந்த இந்தோனேசியா உலகில் நிலநடுக்கங்கள், சுனாமி மற்றும் எரிமலை போன்ற அனர்த்தங்கள் ஒரு வருடத்தில் அதிகளவில் ஏற்படும் நாடுகளில் ஒன்றாகும்.

அண்மையில் பெய்ரூட்டில் நடந்த வெடி விபத்தை அடுத்து லெபனானில் வெடித்த மக்கள் புரட்சியின் விளைவாக லெபனான் அரசின் பிரதமரான தானும், அமைச்சரவையும் பதவி விலகுவதாக அந்நாட்டு பிரதமர் ஹசன் தியாப் தொலைக் காட்சியில் அறிவித்துள்ளார்.