இந்தியா

நேற்று முன்தினம் அ.தி.மு.க. பொதுக்குழு கூடிய போது, அ.தி.மு.க. சட்ட விதிகளில் சில திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டதாக அறிய வருகிறது. குறிப்பாக அ.தி.மு.க. வின் அடிப்படை உறுப்பினராக ஐந்து ஆண்டுகள் தொடர்ந்து இருப்பவர்கள் மட்டுமே, உள்கட்சி தேர்தல், உறுப்பினர் தேர்தல்களில் போட்டியிட முடியும் எனத் திருத்தம் செய்யப்பட்டது.

சிறைசென்றுள்ள சசிகலாவின் தண்டனைக் காலம் கழிந்து வருவதாகவும், சிறையிருந்து மீண்டதும், அ.தி.மு.க. அவர் வசமாகும். அரசியல் ஆளுமை மிக்கவர் அவர் என சில தினங்களின் முன் சுப்பிரமணியன் சுவாமி செய்தியாளர்களிடம் தகவல் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

அவ்வாறு சசிகலா திருப்பி அதிமுகவிற்கு வந்தால், புதிய சட்டத் திருத்தம் அவரை ஐந்தாண்டு காலம் அடிப்படை உறுப்பினராகவே வைத்திருக்க வழிசெய்யும் என கருதப்படுகிறது. இது தவிர, டி.டி.வி.தினகரன் தலைமையிலான அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்திலிருந்து மீண்டும் அதிமுகவில் இணைந்து வருபவர்களையும் இந்தச் சட்டத்திருத்தம் ஐந்து ஆண்டு காலம் அடிப்படை உறுப்பினராக வைத்திருக்க வகை செய்யும் எனத் தெரிவிக்கப்படுகிறது.

 

எமதுபார்வை

தமிழகத்தின் தலைப்புச் செய்திகள்

கோடம்பாக்கம் கோனர்

பரபரப்புக்கு மத்தியில் திருகோணமலையில் இன்று சனிக்கிழமை கூடிய தமிழரசுக் கட்சியின் அரசியல் குழுக் கூட்டம், சுமூகமான முறையில் முடிவுக்கு வந்துள்ளது. 

ஸ்ரீலங்கா சுதந்திக் கட்சிக்கு புதியத் தலைமைத்துவம் அவசியம் என்று முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க தெரிவித்துள்ளார். 

ஆகஸ்ட் 15ஆம் திகதியான இன்று இந்தியாவில் சுதந்திர தின விழா நாடு முழுவதும் கொண்டாடப்பட்டு வருகிறது.

காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் கூட்டத்தில் சச்சின் பைலட் பங்கேற்றதுடன் ராஜஸ்தான் முதல் மந்திரி அசோக் கெலாட்டினையும் இன்று சந்தித்துள்ளார்.

உலகின் முதல் நாடாக ரஷ்யா அறிவித்திருக்கும் தடுப்பு மருந்தை பரிசோதனைக்கு உட்படுத்திப் பார்க்க பிலிப்பைன்ஸ் நாட்டு அதிபர் ரோட்ரிகோ டியுடெர்ட் விருப்பம் தெரிவித்துள்ளார்.

சுவிற்சர்லாந்தில் COVID-19 வைரஸ் தொற்றுக்கள் மீண்டும் அதிகரித்து வருவதால், 1,000 க்கும் மேற்பட்ட மக்கள் கூடும் நிகழ்வுகளுக்கான தடையினை மேலும் ஒரு மாதத்திற்குள் நீட்டிப்பதாக, சுவிஸ் மத்திய கூட்டாட்சி அமைப்பு புதன் கிழமை அறிவித்துள்ளது.