இந்தியா

பலமான அரசியல் மோதல் நடைபெற்று வரும் களமாக மாறியுள்ள மகாராஷ்டிரா சட்டப்பேரவையின் புதிய முதல்வர் தனது ஆதரவினை நீருப்பிக்கவேண்டும். அதற்காக நாளை மாலை 5 மணிக்கு நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த வேண்டும் என உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சிவசேனா, தேசியவாத காங்கிரஸ், காங்கிரஸ் கட்சிகள் கூட்டாகத் தொடர்ந்த வழக்கினை விசாரித்த நீதிபதிகள் இன்று அதன் தீர்பாக இந்த உத்தரவினைப் பிறப்பித்துள்ளார்கள். நாளை நடைபெறும் வாக்கெடுப்பு, வெளிப்படையாக நடைபெறவேண்டும் எனவும், வாக்கெடுப்பு தொலைக்காட்சி நேரலை செய்யப்பட வேண்டுமெனவும், உத்தரவிட்டது நீதிமன்றம்.

நாளை நம்பிக்கை வாக்கெடுப்பில் கலந்து கொள்ளும் வகையில், இன்று மாலை எம்.எல்.ஏக்கள் பதவியேற்க வேண்டும். அது நடைபெற்றதும் இடைக்கால சபாநாயகரையும் தேர்வு செய்ய வேண்டும் எனவும் அந்த உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தீர்ப்பு வெளியானதைத் தொடர்ந்து, காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி நம்பிக்கை வாக்கெடுப்பில் தங்களது கூட்டணி நிச்சயம் வெற்றி பெறும் என நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

 

எமதுபார்வை

தமிழகத்தின் தலைப்புச் செய்திகள்

கோடம்பாக்கம் கோனர்

பரபரப்புக்கு மத்தியில் திருகோணமலையில் இன்று சனிக்கிழமை கூடிய தமிழரசுக் கட்சியின் அரசியல் குழுக் கூட்டம், சுமூகமான முறையில் முடிவுக்கு வந்துள்ளது. 

ஸ்ரீலங்கா சுதந்திக் கட்சிக்கு புதியத் தலைமைத்துவம் அவசியம் என்று முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க தெரிவித்துள்ளார். 

ஆகஸ்ட் 15ஆம் திகதியான இன்று இந்தியாவில் சுதந்திர தின விழா நாடு முழுவதும் கொண்டாடப்பட்டு வருகிறது.

காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் கூட்டத்தில் சச்சின் பைலட் பங்கேற்றதுடன் ராஜஸ்தான் முதல் மந்திரி அசோக் கெலாட்டினையும் இன்று சந்தித்துள்ளார்.

உலகின் முதல் நாடாக ரஷ்யா அறிவித்திருக்கும் தடுப்பு மருந்தை பரிசோதனைக்கு உட்படுத்திப் பார்க்க பிலிப்பைன்ஸ் நாட்டு அதிபர் ரோட்ரிகோ டியுடெர்ட் விருப்பம் தெரிவித்துள்ளார்.

சுவிற்சர்லாந்தில் COVID-19 வைரஸ் தொற்றுக்கள் மீண்டும் அதிகரித்து வருவதால், 1,000 க்கும் மேற்பட்ட மக்கள் கூடும் நிகழ்வுகளுக்கான தடையினை மேலும் ஒரு மாதத்திற்குள் நீட்டிப்பதாக, சுவிஸ் மத்திய கூட்டாட்சி அமைப்பு புதன் கிழமை அறிவித்துள்ளது.