இந்தியா

மகாராஷ்டிராவில், உச்ச நீதிமன்றத் தீர்ப்பினை அடுத்து 80 மணி நேரப் பதவியினை துறந்தனர் முதல்வர் தேவேந்திர பட்னாவிஸ் மற்றும் துணை முதலமைச்சர் அஜித் பவார் ஆகியோர்.

சிவசேனா, தேசியவாத காங்கிரஸ், காங்கிரஸ் சார்பில் உச்ச நீதிமன்றத்தில் தொடுக்கபட்ட வழக்கின் தீர்ப்பு இன்று காலை அறிவிக்கபட்டது. அதன் பிரகாரம் நாளை மாலைக்குள் நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த வேண்டும் என்றும், இன்று மாலை எம்.எல்.ஏக்கள் பதவிப்பிரமாணம் செய்ய வேண்டும் எனும் நீதிமன்ற உத்தரவினைத் தொடர்ந்து, முதல்வர் தேவேந்திரா பட்னாவிசும், துணைமுதல்வர் அஜித்பவாரும் சந்தித்துப் பேச்சுவாரத்தைகளை மேற்கொண்டனர்.

அதனைத் தொடர்ந்து, துணைமுதல்வர் அஜித்பவார் தனது பதவியினை இராஜினாமச் செய்தார். தொடர்ந்து முதல்வர் தேவேந்திரா பட்ணாவிசும் தனது பதவியினை இராஜினாமாச் செய்வதாக அறிவித்துள்ளார். இருவரும் சுமார் என்பது மணிநேரங்களே இப்பதவிகளில் இருந்ததாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

கடந்தமாதம் பாஜகவுடன் கூட்டணி அமைத்து, தேர்தலைச் சந்தித்த சிவசேனாவுடன், முதல்வர் பதவிக்காலப் பங்கீட்டில் முரண்பாடு ஏற்பட்டது. அதனைத் தொடர்ந்து கூட்டணியில் இருந்து விலகிய சிவசேனாவுடன், காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ், கட்சிகள் கூட்டணி அமைக்கும் முயற்சியில் ஈடுபட்டன. இதற்கான கால அவகாசம் கேட்ட போது, போதிய அவகாசம் தர ஆளுனர் மறுத்துவிட்டார்.  எந்தக் கட்சியும் பெரும்பாண்மை நிரூபிக்காத நிலையில், குடியரசுத் தலைவர் ஆட்சி பிரகடனப்படுத்தப்பட்டது.

கூட்டணிப் பேச்சுவாரத்தைகளை முடித்துக்கொண்ட சிவசேனா, காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ், கட்சிகள் புதிய அரசினை அமைக்க எண்ணிய வேளையில், தேசியவாத காங்கிரஸ் தலைவர் அஜித்பவார், பாஜகவுடன் இணைந்து புதிய அரசினை அமைத்துக்ககொண்டதாக அறிவிக்கப்பட்டது. புதிய அரசின் பதவியேற்பு ஏற்றுக் கொள்ள முடியாதது எனவும், இரகசியமாக ஆளுநர்  செயற்பட்டார்  எனவும், பெரும்பாண்மை பலம் நிரூபிக்கப்பட வேண்டும் எனவும், உச்ச நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கு விசாரணைகள், நேற்று நடைபெற்று இன்று தீர்ப்பு வெளியானது.

நீதிமன்ற உத்தரவின்படி நாளை மாலைக்குள் நம்பிக்கை வாக்கெடுப்பினையும், இன்று மாலைக்குள் உறுப்பினர்கள் பதவிப் பிரமாணமும் செய்யவேண்டிய சூழ்நிலையில், முதல்வர் தேவேந்திர பாட்ணாவும், துணைமுதல்வர் அஜித்பவாரும், தங்களது பதவிகளைத் துறந்துள்ளனர். தமது பெரும்பாண்மையினை நம்பிக்கை வாக்கெடுப்பில் நிரூபிக்க முடியாத சூழலில் பாஜக மேற்கொண்ட அரசியற் பின்வாங்கல் நடவடிக்கையாக இது கருதப்படுகிறது.

இந் நிலையில் சிவசேனா, காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் கூட்டணி புதிய அரசினை அமைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. அவ்வாறு கூட்டணி ஆட்சி அமைந்தாலும், அது மிக நீண்டகாலத்துக்கு தொடரமுடியாத சந்தர்பவாதக் கூட்டணி என்ற விமர்சனத்தினை பாஜக தரப்பு சொல்லி வருகிறது. அடிப்படையில் கொள்கை முரன்பாடுடைய இக்கட்சிகளின் கூட்டு நிற்குமா நிலைக்குமா?

 

 

 

“அரசியல்வாதி என்ற அடிப்படையிலும் அமைச்சர் என்ற வகையிலும் இரண்டு வகையான பொறுப்புக்கள் என்னிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன. அவை இரண்டையும் நிறைவேற்றுவதற்கு அனைத்து நடவடிக்கைகளையும் முன்னெடுப்பேன்.” என்று ஈழமக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளரும், கடற்றொழில்துறை அமைச்சருமான டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார். 

அரசியலமைப்பின் 19வது திருத்தச் சட்டத்தை இல்லாது ஒழிக்கவுள்ளதாக நீதி அமைச்சர் அலி சப்ரி தெரிவித்துள்ளார். 

காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் கூட்டத்தில் சச்சின் பைலட் பங்கேற்றதுடன் ராஜஸ்தான் முதல் மந்திரி அசோக் கெலாட்டினையும் இன்று சந்தித்துள்ளார்.

பிரதமர் நரேந்திர மோடி; வெளிப்படையாகவும் நேர்மையாகவும் வரி செலுத்துவோரை கௌரவித்தல் எனும் புதிய திட்டத்தை இன்று காணொலி மூலம் ஆரம்பித்துவைத்தார்.

உலகின் முதல் நாடாக ரஷ்யா அறிவித்திருக்கும் தடுப்பு மருந்தை பரிசோதனைக்கு உட்படுத்திப் பார்க்க பிலிப்பைன்ஸ் நாட்டு அதிபர் ரோட்ரிகோ டியுடெர்ட் விருப்பம் தெரிவித்துள்ளார்.

சுவிற்சர்லாந்தில் COVID-19 வைரஸ் தொற்றுக்கள் மீண்டும் அதிகரித்து வருவதால், 1,000 க்கும் மேற்பட்ட மக்கள் கூடும் நிகழ்வுகளுக்கான தடையினை மேலும் ஒரு மாதத்திற்குள் நீட்டிப்பதாக, சுவிஸ் மத்திய கூட்டாட்சி அமைப்பு புதன் கிழமை அறிவித்துள்ளது.