இந்தியா

‘நான் அதிகளவில் வெங்காயம், பூண்டு சாப்பிடுவதில்லை’ என்று மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார். 

நாடு முழுவதும் வெங்காயத்தின் விலை மிக கடுமையாக உயர்ந்து வருகிறது. ஒரு கிலோ வெங்காயத்தின் விலை ரூ.130 முதல் ரூ.180 வரை உள்ளது. வட மாநிலங்களில் வெங்காயத்தின் இருப்பு குறைந்ததால், மற்ற பகுதிகளுக்கு அனுப்பப்படும் வெங்காயத்தின் அளவு குறைந்தது. இதனால் விலை கடுமையாக உயர்ந்துள்ளது. இதனை கண்டித்து டில்லி உள்ளிட்ட பல பகுதிகளிலும் போராட்டம் நடத்தப்பட்டு வருகிறது. பாராளுமன்றத்தில் வெங்காயம் விலை உயர்வு தொடர்பான விவாதம் நேற்று புதன்கிழமை நடந்தது.

வெங்காய விலை உயர்விற்கு மத்திய அரசு தான் காரணம் எனவும், பொருளாதார மந்த நிலை காரணம் எனவும் எதிர்க்கட்சி எம்.பி.,க்கள் சிலர் குற்றம்சாட்டி பேசினர். அப்போது ஒருவர், வெங்காயத்தின் இந்த அதிரடி விலை ஏற்றம் அதிகம் வெங்காயம் சாப்பிடுபவர்களை எரிச்சலடைய வைக்கும் என்றார்.

அதற்கு குறுக்கிட்டு பேசிய நிர்மலா சீதாராமன், "நான் அதிக அளவில் வெங்காயம், பூண்டு சாப்பிடுவதில்லை. அதனால் உங்களுக்கு அந்த கவலை வேண்டாம். நான் அதிகம் வெங்காயம் பயன்படுத்தாத குடும்பத்தில் இருந்து வந்தவள் " என்றார். இது லோக்சபாவில் சிரிப்பலையை ஏற்படுத்தியது.
தொடர்ந்து பேசிய நிர்மலா சீதாராமன், வெங்காய விலை ஏற்றத்தை கட்டுப்படுத்தவும், தற்போதுள்ள நிலையை சமாளிக்கவும் மத்திய அரசு எடுத்து வரும் நடவடிக்கைகளை பட்டியலிட்டார்.

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தலைமையிலான புதிய அரசாங்கத்தின் 26 பேரடங்கிய அமைச்சரவை தற்போது (இன்று புதன்கிழமை) பதவியேற்று வருகின்றது. 

மாவட்டச் செயலகங்கள் மற்றும் பிரதேச செயலகங்களை பாதுகாப்பு அமைச்சின் கீழ் கொண்டு செல்வதானது, நாட்டின் முழு நிர்வாகத்தையும் இராணுவத்தின் பிடிக்குள் கொண்டு செல்வதற்கு ஒப்பானது என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளர் எம்.ஏ.சுமந்திரன் குற்றஞ்சாட்டியுள்ளார். 

டெல்லி உச்சநீதிமன்றத்தால் பூர்வீக சொத்து உரிமையில் சம பங்கு பெண் பிள்ளைகளும் பெறலாம் எனும் தீர்ப்பை வரவேற்றுள்ளனர்.

இந்தியாவில் பருவமழை காலம் என்பதால் பவானிசாகர் மற்றும் மேட்டூர் அணைகளில் நீர்மட்டம் உயர்வடைந்து வருகிறது.

பசுபிக் பெருங்கடலில் நெருப்பு வளையப் பகுதியில் அமைந்த இந்தோனேசியா உலகில் நிலநடுக்கங்கள், சுனாமி மற்றும் எரிமலை போன்ற அனர்த்தங்கள் ஒரு வருடத்தில் அதிகளவில் ஏற்படும் நாடுகளில் ஒன்றாகும்.

அண்மையில் பெய்ரூட்டில் நடந்த வெடி விபத்தை அடுத்து லெபனானில் வெடித்த மக்கள் புரட்சியின் விளைவாக லெபனான் அரசின் பிரதமரான தானும், அமைச்சரவையும் பதவி விலகுவதாக அந்நாட்டு பிரதமர் ஹசன் தியாப் தொலைக் காட்சியில் அறிவித்துள்ளார்.