இந்தியா

நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் வெங்காயம் சாப்பிடாமல், வெண்ணெய் பழம் சாப்பிடுகிறாரா? என முன்னாள் நிதி அமைச்சர் ப.சிதம்பரம் கேள்வி எழுப்பியுள்ளார். 

ஐ.என்.எக்ஸ் மீடியா முறைகேடு வழக்கில் ப.சிதம்பரம், அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டு திகார் சிறையில் அடைக்கப்பட்டு இருந்தார். இந்த வழக்கில் சுப்ரீம் கோர்ட்டு, அவருக்கு நிபந்தனை ஜாமீன் வழங்கியதை தொடர்ந்து 106 நாட்களுக்கு பிறகு நேற்று திகார் சிறையில் இருந்து விடுதலையானார்.

விடுதலையான ப.சிதம்பரம் நேரடியாக காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியை சந்திக்க அவரது இல்லத்திற்கு சென்றார். அவருடன் கட்சி எம்.பி. மற்றும் அவரது மகன் கார்த்தி சிதம்பரமும் சென்றார்.

ப.சிதம்பரம் நிருபர்களிடம் கூறும் போது, “நான் 106 நாட்களுக்கு பிறகு விடுதலையாகி சுதந்திர காற்றை சுவாசிப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன் என்றார். சுப்ரீம் கோர்ட்டின் உத்தரவை மேற்கோள் காட்டி, அவர் இந்த வழக்கைப் பற்றி கருத்து கூற மறுத்துவிட்டார். இன்று பத்திரிகையாளர் சந்திப்பில் உரையாற்றுவார் என்று எதிர்பார்க்கப்பட்டது.

இந்த நிலையில் இன்று நாடாளுமன்ற கூட்டத்தில் கலந்து கொள்ள வந்த ப.சிதம்பரம், வெங்காய விலை உயர்வை கண்டித்து நாடாளுமன்ற வளாகத்தில் காங்கிரஸ் சார்பில் நடைபெற்ற போராட்டத்தில் கலந்து கொண்டார்.

பின்னர் அவர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

நான் திரும்பி வந்ததில் மகிழ்ச்சி அடைகிறேன். நாடாளுமன்றத்தில் எனது குரலை அரசாங்கத்தால் அடக்க முடியாது. வெங்காயம் சாப்பிடுவதில்லை என்று மத்திய நிதியமைச்சர் நேற்று கூறினார். அதனால், அவர் என்ன சாப்பிடுகிறார்? வெண்ணெய் பழம் (avocado - பட்டர் புரூட்) சாப்பிடுகிறாரா? என கேள்வி எழுப்பினார்.

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தலைமையிலான புதிய அரசாங்கத்தின் 26 பேரடங்கிய அமைச்சரவை தற்போது (இன்று புதன்கிழமை) பதவியேற்று வருகின்றது. 

மாவட்டச் செயலகங்கள் மற்றும் பிரதேச செயலகங்களை பாதுகாப்பு அமைச்சின் கீழ் கொண்டு செல்வதானது, நாட்டின் முழு நிர்வாகத்தையும் இராணுவத்தின் பிடிக்குள் கொண்டு செல்வதற்கு ஒப்பானது என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளர் எம்.ஏ.சுமந்திரன் குற்றஞ்சாட்டியுள்ளார். 

டெல்லி உச்சநீதிமன்றத்தால் பூர்வீக சொத்து உரிமையில் சம பங்கு பெண் பிள்ளைகளும் பெறலாம் எனும் தீர்ப்பை வரவேற்றுள்ளனர்.

இந்தியாவில் பருவமழை காலம் என்பதால் பவானிசாகர் மற்றும் மேட்டூர் அணைகளில் நீர்மட்டம் உயர்வடைந்து வருகிறது.

பசுபிக் பெருங்கடலில் நெருப்பு வளையப் பகுதியில் அமைந்த இந்தோனேசியா உலகில் நிலநடுக்கங்கள், சுனாமி மற்றும் எரிமலை போன்ற அனர்த்தங்கள் ஒரு வருடத்தில் அதிகளவில் ஏற்படும் நாடுகளில் ஒன்றாகும்.

அண்மையில் பெய்ரூட்டில் நடந்த வெடி விபத்தை அடுத்து லெபனானில் வெடித்த மக்கள் புரட்சியின் விளைவாக லெபனான் அரசின் பிரதமரான தானும், அமைச்சரவையும் பதவி விலகுவதாக அந்நாட்டு பிரதமர் ஹசன் தியாப் தொலைக் காட்சியில் அறிவித்துள்ளார்.