இந்தியா

தெலுங்கானாவில் பெண் கால்நடை மருத்துவரை பலாத்காரம் செய்து எரித்து கொன்றதாக குற்றஞ்சாட்டப்படும் நான்கு சந்தேக நபர்களையும் போலீசார் சுட்டுக்கொலை செய்துள்ளனர். 

போலீஸ் பிடியில் இருந்து நால்வரும் தப்பி செல்ல முயன்ற போது, இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த நவ.,27இல், தெலுங்கானாவில் பணி பணி முடிந்து இரவு வீடு திரும்பிய பெண் மருத்துவரை, உதவி செய்வது போல் கடத்திச் சென்று லாரி டிரைவர்கள் 4 பேர் பலாத்காரம் செய்தனர். அப்பெண்ணின் வாயில் கட்டாயப்படுத்தி விஸ்கியை ஊற்றி, அவரை மயக்கமடையச் செய்து, பலாத்காரம் செய்து, பின் கழுத்தை நெறித்து கொலை செய்து , உடலை எரித்தனர். இந்த கொடூரத்தில் ஈடுபட்ட லாரி டிரைவர்கள், கிளீனர்கள் என கேசவலு, முகமது பாஷா, நவீன், சிவா ஆகியோரை போலீசார், கடந்த நவ.,29இல் கைது செய்து விசாரித்து வந்தனர். இச்சம்பவம் நாடு முழுவதும் கொந்தளிப்பை ஏற்படுத்தி உள்ளது. குற்றவாளிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என போராட்டம் வலுத்தது. பார்லிமென்டிலும் இந்த சம்பவம் எதிரொலித்தது. குற்றவாளிகள் 4 பேரையும் 7 நாள் போலீஸ் காவலில் எடுத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்நிலையில், குற்றவாளிகளை, சம்பவம் நடந்த இடத்திற்கு அழைத்து சென்று விசாரணை நடத்த போலீசார் முடிவு செய்தனர். பெண் மருத்துவரை எரித்து கொன்ற, தேசிய நெடுஞ்சாலை 44இல் பாலத்தின் அடியில், குற்றவாளிகளை போலீசார் கொண்டு சென்றனர். அங்கு, குற்றம் எப்படி நடந்தது என நடித்து காட்டுமாறு போலீசார், அவர்களிடம் கூறியுள்ளனர். ஆனால், 4 பேரும் அங்கிருந்து தப்பி செல்ல முயன்றனர். இதனையடுத்து, குற்றவாளிகள் 4 பேரையும் போலீசார் சுட்டு கொன்றனர். சம்பவ இடத்தில் உயர் அதிகாரிகள் ஆய்வு செய்தனர்.

 

எமதுபார்வை

தமிழகத்தின் தலைப்புச் செய்திகள்

கோடம்பாக்கம் கோனர்

பரபரப்புக்கு மத்தியில் திருகோணமலையில் இன்று சனிக்கிழமை கூடிய தமிழரசுக் கட்சியின் அரசியல் குழுக் கூட்டம், சுமூகமான முறையில் முடிவுக்கு வந்துள்ளது. 

ஸ்ரீலங்கா சுதந்திக் கட்சிக்கு புதியத் தலைமைத்துவம் அவசியம் என்று முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க தெரிவித்துள்ளார். 

ஆகஸ்ட் 15ஆம் திகதியான இன்று இந்தியாவில் சுதந்திர தின விழா நாடு முழுவதும் கொண்டாடப்பட்டு வருகிறது.

காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் கூட்டத்தில் சச்சின் பைலட் பங்கேற்றதுடன் ராஜஸ்தான் முதல் மந்திரி அசோக் கெலாட்டினையும் இன்று சந்தித்துள்ளார்.

உலகின் முதல் நாடாக ரஷ்யா அறிவித்திருக்கும் தடுப்பு மருந்தை பரிசோதனைக்கு உட்படுத்திப் பார்க்க பிலிப்பைன்ஸ் நாட்டு அதிபர் ரோட்ரிகோ டியுடெர்ட் விருப்பம் தெரிவித்துள்ளார்.

சுவிற்சர்லாந்தில் COVID-19 வைரஸ் தொற்றுக்கள் மீண்டும் அதிகரித்து வருவதால், 1,000 க்கும் மேற்பட்ட மக்கள் கூடும் நிகழ்வுகளுக்கான தடையினை மேலும் ஒரு மாதத்திற்குள் நீட்டிப்பதாக, சுவிஸ் மத்திய கூட்டாட்சி அமைப்பு புதன் கிழமை அறிவித்துள்ளது.