இந்தியா

இந்தியாவிற்கு, பாகிஸ்தான், ஆஃப்கானிஸ்தான், வங்கதேசம் ஆகிய 3 நாடுகளிலுமிருந்து குடிபெயர்ந்து, இந்தியாவில் அகதிகளாக வாழ்ந்து வருபவர்களுக்கு, இந்தியக் குடியுரிமை தரும் குடியுரிமை சட்ட திருத்த மசோதாவை உள்துறை அமைச்சர் அமித் ஷா இன்று மக்களவையில் தாக்கல் செய்துள்ளார்.

மேற்படி மூன்று நாடுகளிலிலுமிருந்து இந்தியாவில் அகதிகளாக குடிபெயர்ந்த, இந்துக்கள், கிறிஸ்தவர்கள், பௌத்தர்கள், சமணர்கள், பார்ஸியர்கள், சீக்கியர்கள் ஆகிய ஆறு மதப்பிரிவினர் மட்டுமே, இந்த சட்டப் பிரகாரம் குடியுரிமை பெறும் வாய்ப்பினைப் பெறுவார்கள். மேலும் இச்சட்டப்படி குறித்த இந்த அறு மதத்தவர்களும், குறைந்தது ஆறு ஆண்டுகள் இந்தியாவில் வசித்திருக்க வேண்டும் என்பதும் முக்கியமானதாகும். முன்னர் பதினொரு ஆண்டுகள் என இருந்த இந்தக் கால அவகாசம் தற்போது ஆறு ஆண்டுகளாகக் குறைக்கப்பட்டுள்ளது.

மக்களவையில் இச்சட்டத்திருத்த மசோதாவை தாக்கல் செய்து உரையாற்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷா, "தேசிய குடியுரிமை சட்டத்திருத்த மசோதா சிறுபான்மையினருக்கு எதிரானது., மசோதாவில் பாகுபாடுகள் எதுவும் காட்டப்படவில்லை " எனக் குறிப்பட்டார்.

இந்தச் சட்டத்திருத்த மசோதாவில், இஸ்லாமியர்களுக்கு இந்த சட்டத்தில் இடமில்லாததால் இது சிறுபான்மையினருக்கு எதிரானது. அரசியலமைப்பு சட்டத்தில் அனைவரும் சமம் என்ற சட்டவிதிகளுக்கு இது எதிரானது என இச் சட்டத்திருத்தம் குறித்த ஆட்சேபங்களும் விமர்சனங்களும் வைக்கப்படுகின்றன.

இதேவேளை மூன்று தசாப்தங்களாக இந்தியாவில் அகதிகளாக வாழ்ந்து வரும் இலங்கைத் தமிழ்மக்களும் இதில் கவனம் கொள்ளப்படவில்லை எனும் கருத்தும் பேசப்படுகிறது.

வடக்கு – கிழக்கு உள்ளிட்ட தமிழ் மக்கள் அதிகமுள்ள பகுதிகளில் தடைப்பட்டுப் போன அபிவிருத்தித் திட்டங்கள் மீள ஆரம்பிக்கப்பட்டு துரிதப்படுத்தப்படும் என பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். 

அமைச்சரவை அமைச்சர்கள் 28 பேரும், இராஜாங்க அமைச்சர்கள் 40 பேரும் நாளை புதன்கிழமை பதவியேற்கவுள்ளனர். 

டெல்லி உச்சநீதிமன்றத்தால் பூர்வீக சொத்து உரிமையில் சம பங்கு பெண் பிள்ளைகளும் பெறலாம் எனும் தீர்ப்பை வரவேற்றுள்ளனர்.

இந்தியாவில் பருவமழை காலம் என்பதால் பவானிசாகர் மற்றும் மேட்டூர் அணைகளில் நீர்மட்டம் உயர்வடைந்து வருகிறது.

பசுபிக் பெருங்கடலில் நெருப்பு வளையப் பகுதியில் அமைந்த இந்தோனேசியா உலகில் நிலநடுக்கங்கள், சுனாமி மற்றும் எரிமலை போன்ற அனர்த்தங்கள் ஒரு வருடத்தில் அதிகளவில் ஏற்படும் நாடுகளில் ஒன்றாகும்.

அண்மையில் பெய்ரூட்டில் நடந்த வெடி விபத்தை அடுத்து லெபனானில் வெடித்த மக்கள் புரட்சியின் விளைவாக லெபனான் அரசின் பிரதமரான தானும், அமைச்சரவையும் பதவி விலகுவதாக அந்நாட்டு பிரதமர் ஹசன் தியாப் தொலைக் காட்சியில் அறிவித்துள்ளார்.