இந்தியா
Typography

இரண்டாயிரம் ரூபாய் நோட்டை விரைவில் வாபஸ் பெற இருப்பதாகவும், மீண்டும் புதிய ஆயிரம் ரூபாய் நோட்டுக்களை அறிமுகப்படுத்தவுள்ளதாகவும் பொது மக்கள் மத்தியில் பரவலான கருத்து நிலவுகிறது.

மத்திய அரசிடம் இவ்வாறான திட்டம் ஏதும் உள்ளதா என்பதை அரசு வெளிப்படுத்த வேண்டும் என சமாஜ்வாதிக் கட்சியின் எம்.பி. விஷம்பர் பிரசாத் நிஷாத் மக்களவையில் பேசுகையில், வினாத் தொடுத்தார்.
அதற்கு பதில் அளித்து பேசிய மத்திய நிதி இணை மந்திரி அனுராக் தாக்கூர், பணமதிப்பிழப்பு குறித்து யாரும் கவலைப்படத் தேவையில்லை.

இரண்டாயிரம் ரூபாய் நோட்டை திரும்பப் பெறும் திட்டம் ஏதும் மத்திய அரசிடம் இல்லை. அதே பொல் புதிய ஆயிரம் ரூபாய் நோட்டை மீண்டும் அறிமுகப்படுத்தும் எண்ணமும் இல்லை. எனக்குறிப்பிட்டார்.

BLOG COMMENTS POWERED BY DISQUS

பகிர்வதற்கு

 

 

மின்னஞ்சலில் பதிவுகள்

மின்னஞ்சலில் பதிவுகள்