இந்தியா
Typography

இந்தியப் பிரதமர் மோடி, செல்லுமிடங்களில் எல்லாம் " மேக் இன் இந்தியா" எனப் பெருமிதம் பேசி வருகின்றார். ஆனால் அவரது ஆட்சி நடைபெறும் இந்தியாவில் முன்னெப்போதுமில்லாத வகையில், பாலியல் வன்முறைகள் நடைபெறுகின்றன.

" ரேப் இன் இந்தியா" வாக நாடு தற்போது மாறியுள்ளதாக, ஜார்கண்ட் மாநிலத்தில் ஒரு கூட்டத்தில் உரையாற்றும் போது குறிப்பிட்டிருந்தார். ராகுல்காந்தியின் இந்தக் கூற்று நாட்டு அவமதிப்புத் தருவதாக உள்ளதாகவும், இதற்காக அவர் மன்னிப்புக் கேட்க வேண்டும் எனவும், பா.ஜ.க. எம்.​பி.க்கள் மக்களவையில் கோரிக்கை விடுத்து, கடும் ஆட்சேபம் தெரிவித்தனர்.

இதற்கு மக்களவையில் பதிலளிளக்க ராகுல் காந்திக்கு சபாநாயகர் அனுமதி மறுத்து விட்டார். இந் நிலையில், பாராளுமன்ற வளாகத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த ராகுல் காந்தி, பிரதமரின் " மேக் இன் இந்தியா " செய்தியைப் பார்க்கும் நம்பிக்கையில் ஒருவர் செய்தித்தாளை திறந்து பார்க்கையில், பாலியல் வன்கொடுமை தொடர்பான பல செய்திகள் இடம்பெறுகின்ற நிலையே தற்போதுள்ளது. இதனைச் சொல்லியதற்காக நான் ஏன் மன்னிப்புக் கேட்க வேண்டும். உள்ளதை உள்ளபடியே சொல்லியுள்ளேன். இதற்காக நான் மன்னிப்புக் கெட்கப் போவதில்லை எனக் கூறியுள்ளதாக அறிய வருகிறது.

BLOG COMMENTS POWERED BY DISQUS

பகிர்வதற்கு

 

 

மின்னஞ்சலில் பதிவுகள்

மின்னஞ்சலில் பதிவுகள்