இந்தியா
Typography

சபரிமலை ஐய்யப்பன் கோவிலுக்கு அனைத்து வயது பெண்களும் சென்று வழிபடலாம் என கடந்த ஆண்டு சுப்ரீம் கோர்ட் வழங்கியுள்ள போதும், அது இறுதியான தீர்ப்பு அல்ல.

சபரிமலை விவகாரம் தொடர்பாக பிந்து அம்மிணி, பாத்திமா ஆகிய பெண்கள் கொடுத்த மனுக்கள் மீதான விசாரணை சுப்ரீம் கோர்ட்டில் தலைமை நீதிபதி எஸ்.ஏ.போப்டே நீதிபதிகள் ஆர்.எஸ்.கவாய், சூரியகாந்த் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு நேற்றைய தினம் விசாரணைக்கு வந்த போதே நீதிபதிகள் மேற் கண்டவாறு தெரிவித்திருந்ததாக தெரிய வருகிறது.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், இந்த வழக்குத் தொடர்பான மேல்முறையீட்டு வழக்கு ஏழு நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன அமர்வுக்கு நீதிமன்றம் மாற்றி உள்ளது. அது விரைவில் அமைக்கப்பட்டு முடிவு எடுக்கும் வரை, புதிய உத்தரவு எதையும் பிறப்பிக்க முடியாது எனத் தெரிவித்தார்கள்.

சபரிமலை கோவிலுக்கு செல்ல அனைத்து வயது பெண்களையும் செல்வதற்கு நீதிமன்றம் அனுமதி வழங்கி தீர்ப்பு கூறிய நிலையில், அனைத்து பெண்களும் செல்வதற்கு அனுமதிக்கப்பட்டால் மகிழ்ச்சிதான். ஆனால் அந்த உத்தரவினால் அங்கு குழப்ப நிலைகள் உருவாகுவதை ஒருபோதும்நாங்கள் விரும்பவில்லை.

அனைத்து வயது பெண்களையும் அனுமதிக்கும் பிரச்சினையில் மக்கள் உணர்வுகள் வேறுபட்டிருப்பதனால் இதனை அமைதி வழியில் தீர்வு காணவே விரும்புகின்றோம். ஆகவே சபரிமலை கோவிலுக்கு செல்லும் அனைத்து வயது பெண்களுக்கும் பாதுகாப்பு வழங்குமாறு கேரள அரசுக்கு உத்தரவிட முடியாது எனத் தெரிவித்து இம் மனுக்கள் மீதான விசாரணையை நீதிபதிகள் நிறைவு செய்தனர்.

BLOG COMMENTS POWERED BY DISQUS

பகிர்வதற்கு

 

 

மின்னஞ்சலில் பதிவுகள்

மின்னஞ்சலில் பதிவுகள்