இந்தியா
Typography

பாலியல், கடத்தல் வழக்கு போன்ற பல வழக்குகள் போடப்பட்டுள்ள நிலையில், லெனின் கருப்பன் பெங்களூர் நீதிமன்றத்தில் நித்தியானந்தாவை கண்டுபிடிக்கக் கோரி, தாக்கல் செய்த மனுவினை விசாரித்த நீதிமன்றம், நித்யானந்தா இருக்குமிடத்தை கண்டு பிடிக்கக் காவல்துறைக்கு உத்தரவிட்டிருந்தது.

இந்த வழக்கின் மீதான விசாரணை மீண்டும் நடந்தபோது, காவல் துறையால் இது தொடர்பான அறிக்கை எதுவும் அளிக்கப்படவில்லை. இதன் காரணமாக, எதிர்வரும் 18 ந் திகதிக்குள் நித்யானந்தாவை கண்டுபிடித்து அறிக்கை அளிக்க வேண்டுமென காவல்துறைக்கு உத்தரவிட்டுள்ள நீதிபதிகள், இதனை காவல்துறை நிறைவேற்றாத பட்சத்தில் அது நீதிமன்ற அவமதிப்பாக கருதப்படும் எனவும் கண்டிப்பாகக் குறிப்பிட்டதாகவும் தெரிய வருகிறது.

இது இவ்வாறிருக்க, இமயமலைப் பகுதியில் மறைந்திருப்பதாகக் கருதப்படும் நித்தியானந்தா, மத்திய ஆட்சியாளர்களையும், இந்துக்களையும், கவரும் வகையில் அவ்வப்போது வீடியோக்களை வெளியிட்டு வருகின்றார். அந்த வரிசையில் அவர் இலங்கைத் தமிழ் இந்து மக்களின் கவனத்தைப் பெறும் வகையில், இறுதியாக வெளியிட்ட வீடியோவில், தனது அடுத்த இலக்கு யாழ்ப்பாணத்திலுள்ள நல்லை ஆதீனம் என்று குறிப்பிட்டுள்ளார். ஆனால் யாழ்ப்பாணம் நல்லை ஆதீன குருமகா சன்னிதானம், நித்தியானந்தாவுக்கும் நல்லை ஆதீனத்துக்கும் எதுவித தொடர்புமில்லை என மறுத்துள்ளார்.

இது இவ்வாற்றிருக்க முக்கிய அரசியல் பிரமுகர்களின் ஆதரவினாலேயே நித்தியானந்தா இவ்வளவு தூரம் கட்டுங்கடங்காது செய்ற்படுகின்றார் எனவும், அரசியல் பின்புலம் உள்ளதனாலேயே காவல்துறை அவரைக் கண்டுபிடிப்பதில் தயக்கம் காட்டுகின்றது என்றும் பரவலான கருத்துக்கள் எழுந்தும் வருகின்றன என்பதும் குறிப்பிடத்தக்கது.

BLOG COMMENTS POWERED BY DISQUS

பகிர்வதற்கு

 

 

மின்னஞ்சலில் பதிவுகள்

மின்னஞ்சலில் பதிவுகள்