இந்தியா
Typography

கேரளாவைச் சேர்ந்த பாத்திமா லத்தீப் சென்னை ஐஐடி மாணவி. விடுதியில் தங்கியிருந்து, முதுகலைப் பட்டப்படிப்பில், முதலாமாண்டு படித்து வந்த இவர் கடந்த ‌நவம்பர் மாதம், விடுதியில் தூக்கில் தொங்கி தற்கொலை செய்து கொண்டது அறிந்ததே.

தனது மகளின் மரணத்தில் மர்மம் இருப்பதாகவும், சென்னை மத்திய குற்றப் பிரிவு காவல்துறையினர் விசாரித்து வரும், இந்த வழக்கை சிபிஐ விசாரணைக்கு மாற்ற வேண்டும் எனவும், பிரதமர் மோடி, முதலமைச்சர் பழனிசாமி உள்ளிட்டோரை சந்தித்து, மாணவி பாத்திமாவின் தந்தை அப்துல் லத்தீப் மனு அளித்திருந்தார்.

இந் நிலையில் சிபிஐ விசாரணைக் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மனுவை தள்ளுபடி செய்த நீதிமன்றம், சிபிஐ விசாரணை தொடர்பில் தமிழக அரசு முடிவு செய்யலாம் எனத் தெரிவித்திருந்தது. இதனைத் தொடர்ந்து தற்போது இந்த வழக்கை தமிழக அரசு ,சிபிஐ விசாரணைக்கு மாற்றி உத்தரவிட்டுள்ளது.

BLOG COMMENTS POWERED BY DISQUS

பகிர்வதற்கு

 

 

மின்னஞ்சலில் பதிவுகள்

மின்னஞ்சலில் பதிவுகள்