இந்தியா
Typography

குடியுரிமை சட்டத் திருத்தத்தை அ.தி.மு.க ஆதரித்தது கேலிக்குரிய நடவடிக்கை என்று முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் தெரிவித்துள்ளார். 

ப.சிதம்பரம் தனது டுவிட்டர் பதிவில், “தலைமைச் செயலகத்தில் உள்ள துணைச் செயலாளரின் உத்தரவுக்கு ஏற்ப, குடியுரிமைச் சட்டத் திருத்தத்தை ஆதரித்து வாக்களித்தோம் என அதிமுக எம்பி, எஸ்.ஆர்.பாலசுப்பிரமணியம் கூறியுள்ளது கவலைக்குரியது. இது நாடாளுமன்ற உறுப்பினர்களுக்குத் தலைக்குனிவு. இலங்கைத் தமிழர்களை ஏன் ஒதுக்கினீர்கள்? அவர்களில் பெரும்பான்மையானோர் இந்துக்கள் என்பதை அரசு மறந்துவிட்டதா?.” என்றும் கேள்வி எழுப்பியுள்ளார்.

BLOG COMMENTS POWERED BY DISQUS