இந்தியா
Typography

நாட்டின் பல இடங்களில் நடைபெறும் வன்முறை நிறுத்தப்பட வேண்டும் என்று உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி பாப்டே கருத்து தெரிவித்துள்ளார். 

டெல்லியில் போலீசே தீ வைப்பு, சூறையாடல் போன்றவற்றில் ஈடுபட்டது பற்றி வழக்கறிஞர்கள் உச்சநீதிமன்றத்தில் முறையிட்டனர். அப்போது கருத்து தெரிவித்த தலைமை நீதிபதி எஸ்.ஏ.பாப்டே, மாணவர்கள் சட்டத்தை கையில் எடுத்துக்கொண்டு வன்முறையில் ஈடுபடக்கூடாது என்று தெரிவித்தார். பொதுச்சொத்துகளுக்கு சேதம் விளைவிப்பதை அனுமதிக்க முடியாது என்று தலைமை நீதிபதி கண்டனம் தெரிவித்தார்.

சட்டம் ஒழுங்கை பாதுகாக்கவே காவல்துறை உள்ளது என்றும் முதலில் அங்கு அமைதி நிலவட்டும் என்று உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது. யார் கலவரம் செய்தனர், யார் அமைதியாக போராடினர் என்பதை நாங்கள் இப்போது சொல்ல முடியாது என்றும் வன்முயைான போராட்டங்களை அரசியல் சாசனம் அனுமதிக்கவில்லை என்றும் தலைமை நீதிபதி எஸ்.ஏ.பாப்டே தெரிவித்துள்ளார். போராட்டங்களில் காயமடைந்த மாணவர்களுக்கு உரிய சிகிச்சை அளிக்க வேண்டும் என்றும் தலைமை நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.

குடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிரான போராட்டங்கள் குறித்த வழக்குகள் நாளை விசாரிக்கப்படும் என்று தலைமை நீதிபதி அறிவித்துள்ளார். குடியுரிமை சட்டத்துக்கு எதிராக நாடு முழுவதும் பல்வேறு பகுதிகளில் போராட்டங்கள் நடந்துவருகின்றன. இந்த நிலையில், டெல்லி ஜாமியா மிலியா இஸ்லாமியா பல்கலைக்கழக மாணவர்கள், இந்த விவகாரம் தொடர்பாக நேற்று மாலை போராட்டத்தில் ஈடுபட்டனர். அந்தப் போராட்டத்தில் வன்முறை வெடித்த நிலையில், அதைக் கட்டுப்படுத்த போலீசார் கண்ணீர்ப்புகை குண்டு வீசினர். டெல்லி போரட்டத்தின்போது, பேருந்துகள் சிலவும் தீவைத்து எரிக்கப்பட்டன.

இதையடுத்து, பல்கலைக்கழக வளாகத்துக்குள் அத்துமீறி நுழைந்த போலீசார், மாணவர்கள்மீது தாக்குதல் நடத்தினர். பல்கலைக்கழக நிர்வாகிகளின் அனுமதியின்றி வளாகத்துக்குள் நுழைந்த போலீசார், நூலகம், விடுதிகள் மற்றும் பல்கலைக்கழக வளாகத்தில் இருந்த மசூதி ஆகியவற்றில் இருந்த மாணவர்கள்மீது தாக்குதல் நடத்தினர். டெல்லியில் போலீசே தீ வைப்பு, சூறையாடல் போன்றவற்றில் ஈடுபட்டது பற்றி வழக்கறிஞர்கள் உச்சநீதிமன்றத்தில் முறையிட்டனர். போராட்டங்களை நிறுத்தி அமைதி காத்தால் மனுக்களை விசாரிக்கிறோம் என்று உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி எஸ்.ஏ.பாப்டே தெரிவித்துள்ளார்.

BLOG COMMENTS POWERED BY DISQUS