இந்தியா

சொந்த நாட்டு மக்கள் மீதே மோடி அரசு போர் தொடுக்கிறது என்று காங்கிரஸ் கட்சித் தலைவர் சோனியா காந்தி குற்றஞ்சாட்டியுள்ளார். 

பாகிஸ்தான், வங்கதேசம், ஆப்கானிஸ்தான் போன்ற நாடுகளில் இருந்து இந்தியாவில் குடியேறி உள்ள முஸ்லிம் அல்லாதவர்களுக்கு குடியுரிமை வழங்க வகை செய்யும் குடியுரிமை திருத்த சட்டத்தை மத்திய அரசு நிறைவேற்றி உள்ளது.

இந்த சட்டத்துக்கு எதிராக மேற்குவங்கம், அசாம், மேகாலயா உள்ளிட்ட வடகிழக்கு மாநிலங்களில் மிகப்பெரும் போராட்டங்கள் நடந்து வருகின்றன.

இஸ்லாமியர்கள் தவிர்த்துப் பிற மதத்தினருக்கு மட்டும் ஆதரவாக இருக்கும் இந்த சட்டத்துக்குப் பல்வேறு தரப்பினர் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். ஆனால், வடகிழக்கு மாநிலங்களில் வாழும் பூர்வீக குடிமக்கள் தங்களது பெரும்பான்மைக்கும், பாரம்பரியத்துக்கும் ஆபத்து வரவாய்ப்புள்ளதாக கூறி இந்த சட்டத்துக்கு எதிராக போராட்டம் நடத்தி வருகின்றனர்.

அசாம், திரிபுரா, மேகாலயா உள்ளிட்ட வடகிழக்கு மாநிலங்களில் வலுத்த போராட்டம் தற்போது மேற்குவங்கம், உத்தரப்பிரதேசம், டெல்லி மாநிலங்களிலும் தீவிரமடைந்துள்ளது.

மூன்றாம் நாளாக மேற்கு வங்கத்தில் நடைபெற்று வரும் போராட்டத்தில் ரயில் நிலையம், ரயில்கள், பேருந்துகள் என பொது சொத்துகள் தீக்கிரையாக்கப்பட்டு வருகின்றன. அத்துடன் பல்வேறு இடங்களில் சாலை மறியல் உள்ளிட்ட போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன.

மாநிலத்தின் மால்டா, உத்தர் தினாஜ்பூர், முர்ஷிதாபாத், ஹவுரா, வடக்கு 24 பர்கானாக்கள் மற்றும் தெற்கு 24 பர்கானாஸ் ஆகிய 6 மாவட்டங்களின் சில பகுதிகளில் வதந்திகள் பரப்பப்படுவதையும், போலி செய்திகள் பரப்பப்படுவதையும் தடுக்கும் பொருட்டு, இணைய சேவைகள் நிறுத்தப்பட்டன.

சட்டத்தை எதிர்த்து நாடு முழுவதும் பல இடங்களில் போராட்டங்கள் நடைபெற்று வரும் நிலையில், டெல்லி ஜாமியா மிலியா பல்கலைக் கழக மாணவர்களும் தொடர்ந்து போராட்டம் நடத்தி வருகின்றனர். நேற்று டெல்லியில் நடந்த போராட்டத்தில் ஜாமியா மிலியா பல்கலைக் கழகத்திற்கு வெளியே பேருந்துக்கு தீ வைக்கப்பட்டது.

இதனால் அங்கிருந்த மாணவர்கள் மீது போலீசார் தாக்குதல் நடத்தினர். இந்த சம்பவத்தில் 6 போலீசார் மற்றும் 50க்கும் மேற்பட்ட மாணவர்கள் கடுமையாக காயம் அடைந்தனர். மாணவர்கள் போராட்டத்தில் நடந்த வன்முறை காரணமாக ஜாமியா பல்கலைக்கழகம் ஜன. 5ம் தேதி வரை மூடப்பட்டது. விடுதியில் இருந்து மாணவர்கள் தங்களது சொந்த ஊர்களுக்கு இன்று புறப்பட்டு சென்றனர்.

போலீசாரால் கைது செய்யப்பட்ட மாணவர்களை விடுவிக்கக் கோரி டெல்லி காவல் துறை தலைவர் அலுவலகம் முன், இன்று காலை நூற்றுக் கணக்கான மக்கள் குவிந்தனர். இதையடுத்து, கைது செய்யப்பட்ட 50 மாணவர்களும் விடுவிக்கப்பட்டனர். இந்நிலையில் கேரளாவில் முதலமைச்சர் பினராயி விஜயன் தலைமையில் போராட்டம் நடத்தினர். மேலும் கொல்கத்தாவில் மம்தா பானர்ஜி தலைமையில் பேரணி நடத்தினர்.

இந்த நிலையில் தான் டெல்லி இந்தியா கேட் பகுதியில் காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார். இந்நிலையில் இது தொடர்பாக காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி அறிக்கை வெளியிட்டுள்ளார்.

அதில்; “அமைதி மற்றும் நல்லிணக்கத்தை பேணுவது, நல்ல நிர்வாகத்தை கொடுப்பது அரசியலைமைப்பை காப்பது ஆகியவைதான் ஒரு அரசாங்கத்தின் பணியாகும். ஆனால், பாஜக அரசு தனது சொந்த நாட்டு மக்கள் மீதே போர் தொடுக்கிறது. வன்முறையையும், பிரிவினைவாதத்தையும் உருவாக்குவதாக அரசு இருக்கிறது. இளைஞர்களை நிலையற்ற தன்மைக்கும், வெறுப்பு நிறைந்த படுகுழிக்கும் நாட்டை இந்த அரசு தள்ளுகிறது. நாட்டின் நிலையற்றதன்மையை உருவாக்க வேண்டும் என்பதுதான் அரசின் கொள்கை என்பது தெளிவாக புரிகிறது. மோடி அரசு நிர்வாகத்தில் தோல்வி அடைந்துவிட்டது என்பது தெளிவாகத் தெரிகிறது. பிரிவினைவாதத்துக்கான கருத்துருவின் எழுத்தாளர்களாகப் பிரதமர் மோடியும், அமித்ஷாவும் தான் இருக்கிறார்கள்.

நாட்டில் நிலையற்ற தன்மையை பரப்புவதும், இளைஞர்களின் உரிமையைப் பறிப்பதும், தேசத்தில் மதரீதியான பதற்றத்தை ஏற்படுத்துவதும், தனது சொந்த அரசியல் நலன்களுக்காக இருப்பதுதான் இந்த அரசின் நோக்கம் தெளிவாகப் புரிகிறது. அசாம், மேகாலயா மாநிலங்கள் பற்றி எரிகின்றன, 4 இளைஞர்கள் கொல்லப்பட்டுள்ளார்கள். வடகிழக்கு மாநிலங்களுக்குச் செல்ல அமித் ஷாவுக்கு துணிச்சல் இல்லை அதனால் பயணத்தை ரத்து செய்தார். அவர் மட்டுமல்ல வங்கதேச அமைச்சர், ஜப்பான் பிரதமரும் இந்தியா வருவதைத் தவிர்த்தனர். நாட்டில் பணவீக்கம் உச்சத்தைத் தொட்டுவிட்டது, வேலையின்மை எப்போதும் இல்லாதவகையில் உயர்ந்துவிட்டது. மதங்களுக்கு இடையே பதற்றத்தைப் பரப்பியும், குழப்பத்தை ஏற்படுத்தியும், முக்கிய பிரச்சினைகளில் இருந்து கவனத்தைத் திசைதிருப்ப மோடி அரசு முயல்கிறது.

மத்திய அரசு தனது தோல்விகளை மறைக்கவும், மக்களைத் திசைதிருப்பும் செய்யும் திட்டங்களில் ஒன்றுதான் இந்த தேசிய குடியுரிமை பதிவடு, குடியுரிமை திருத்தச்சட்டம்” ஆகும் என்று தெரிவித்துள்ளார். மோடி அரசு ஒன்றைப் புரிந்து கொள்ள வேண்டும். இளைஞர்கள் சக்தி திரளும்போது விழிக்கும்போது, புதிய வடிவில் அலைபோன்ற மாற்றம் உருவாகும். இளைஞர்கள், மாணவர்கள் மீது காவல்துறையின் கட்டவிழ்த்த அடக்குமுறை மோடி அரசின் முடிவுக்கான தொடக்கம்” என்று சோனியா காந்தி வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

தியாகி திலீபனின் நினைவேந்தல் நிகழ்வுகளுக்கு தடைவிதிக்கப்பட்ட நிலையில், செல்வச் சந்நிதி முருகன் ஆலய முன்றலில் நாளை சனிக்கிழமை முன்னெடுக்கப்படவிருந்த உண்ணாவிரதப் போராட்டத்துக்கு பருத்தித்துறை நீதவான் நீதிமன்றம் தடை விதித்துள்ளது. 

“நினைவேந்தல் உரிமையை வலியுறுத்தியும் ராஜபக்ஷ அரசாங்கத்தின் சர்வாதிகார நடவடிக்கைக்கு எதிராகவும் நாளை சனிக்கிழமையும், எதிர்வரும் திங்கட்கிழமையும் நடைபெறவுள்ள அறவழிப் போராட்டங்களில் தமிழ்பேசும் சமூகத்தினர் அனைவரும் கட்சி பேதமின்றி ஓரணியில் திரண்டு முழுமையான பங்களிப்பை வழங்கவேண்டும்” என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் வேண்டுகோள் விடுத்துள்ளார். 

இந்தியத் திரைவானில் சுமார் 40 ஆயிரம் பாடல்களைப் பாடிய சாதனைச் சொந்தக்காரர் பின்னணிப் பாடகர் எஸ்.பி.பாலசுப்ரமணியம் அமைதியுற்றார்.

7 மாநில முதல் மந்திரிகளுடனான கொரோனா ஆலோசனை கூட்டத்தில் பிரதமர் நரேந்திர மோடி நேற்று கலந்துரையாடினார்.

நாளை வெள்ளிக்கிழமை முதலான வார இறுதி நாட்களில், சுவிற்சர்லாந்தின் பல பகுதிகளில் பனிப்பொழிவு இடம்பெறலாம் என சுவிஸ் வானிலை மையம் அறிவித்துள்ளது.

சுவிற்சர்லாந்தின் புகழ்பெற்ற லொசேன் ஈ.எச்.எல் ஹாஸ்பிடாலிட்டி மேனேஜ்மென்ட் கல்விக் கூடத்தில் சுமார் 2,500 மாணவர்கள், கொரோனா வைரஸ் தொற்றுக் காரணமாகத் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர் என பிராந்திய அதிகாரிகள் நேற்று புதன்கிழமை அறிவித்துள்ளனர்.