இந்தியா
Typography

பிரதமர் மோடி தலைமையிலான ஆட்சியில் அரச பயங்கரவாதம் தலைவிரித்தாடுவதாக மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார். 

இது தொடர்பாக இன்று அவர் நிருபர்களிடம் பேசுகையில்; “நாட்டில் பொருளாதாரம் பின்னோக்கி செல்கிறது, விலைவாசி விண்ணோக்கி செல்கிறது என்ற நிலையில் குடியுரிமை சட்டம் இப்போது கொண்டு வர அவசரம் காட்டுவது ஏன்? இது நாடு முழுவதும் ஒரு துவக்கப்புள்ளி. பாகிஸ்தான் இந்துக்களுக்கு இடம் அளிக்கும் சட்டத்தில் இலங்கை இந்துக்களுக்கு இல்லை. இலங்கை தமிழர்கள் நிலை என்ன?

கேள்வி கேட்கும் குரலை நெரிப்பது அரசு பயங்கரவாதம். கேள்வி கேட்க அச்சப்பட வேண்டும் என விழும் அடி. மாணவனுக்கு பதில் இல்லை, விவசாயிக்கு வழி இல்லை. பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை. வேலை வாய்ப்பு இல்லை. அப்படி இருக்கும் போது மக்களை திசை திருப்ப குடியுரிமை சட்டம் ஏன் என்பதற்கும் பதில் இல்லை. மாணவர்கள் மீது விழும் அடி இந்திய ஜனநாயகத்தின் கருத்துரிமையின் மீது விழும் அடி.

சட்டத் திருத்தங்களை தனக்கு சாதமாக்கி கொண்ட இவர்கள் அடுத்து என்ன செய்வார்கள் என இருண்ட சூழல் உள்ளது. ஜனநாயகத்தை நாம் காத்திட வேண்டும். இதற்கு மாறாக உள்ள மக்களுக்கு எதிரான தனிநாயகத்தை ஒழிக்கும் வரை நான் ஓய மாட்டேன். எங்கள் காலுக்குள் பாம்புகள் விடப்படுகிறது. நாங்கள் எங்கள் இளைஞர்கள் பயப்பட மாட்டோம். தற்போது தேச விரோத சக்திகளின் வீழ்ச்சியின் துவக்கம் இது. சர்வாதிகாரத்திற்கு எதிராக சுதந்திர காற்றை சுவாசிக்க ஜனநாயக ஆற்றில் மூழ்கிதான் எழ வேண்டும்.” என்றுள்ளார்.

BLOG COMMENTS POWERED BY DISQUS