இந்தியா
Typography

பா.ஜ.க.வின் வாக்குறுதியான குடியுரிமை சட்டத்தை நிறைவேற்றுவதில் சமரசம் செய்யப்போவது இல்லை என்று மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தெரிவித்துள்ளார். 

தொலைக்காட்சிக்கு பேட்டியளித்துள்ள அமித்ஷா, “டில்லியில் ஜாமியா மிலியா இஸ்லாமிய பல்கலைக்கழகம், மாணவர்கள் போராட்டம் எதிர்க்கட்சியினரின் தூண்டுதலால் ஏற்பட்டது. மாணவர்கள் தவறாக வழிநடத்தப்படுகிறார்கள்.

குடியுரிமை திருத்த சட்டத்தினை மாணவர்கள் முழுமையாக தெரிந்து கொள்ள வேண்டும். சிறுபான்மையினர் உள்ளிட்ட எந்த குடிமகனையும் பாதிக்காத முறையில் குடியுரிமை திருத்த சட்டம் கொண்டு வரப்பட்டுள்ளது. அதே நேரம் சட்டவிரோதமாக ஊடுருவபவர்களை தடுக்கவே என்.ஆர்.சி. என்ற தேசிய குடியுரிமை பதிவேடு அமல்படுத்தப்பட்டுள்ளது. நாடு முழுவதும் 300 பல்கலைக்கழகங்களில் 22 பல்கலைக்கழகம்தான் மாணவர்கள் போராட்டம் நடத்துகின்றனர்.” என்றுள்ளார்.

BLOG COMMENTS POWERED BY DISQUS