இந்தியா

சோனியா காந்தி தலைமையில் எதிர்க்கட்சி தலைவர்கள் அணிவகுத்து சென்று குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்தை சந்தித்தனர். குடியுரிமை திருத்த சட்டத்தை ரத்து செய்ய வலியுறுத்தினர். 

மத்தியில் அமைந்துள்ள பாரதீய ஜனதா கூட்டணி அரசு, குடியுரிமை திருத்த சட்டம் கொண்டு வந்துள்ளது. இந்த சட்டம், பாகிஸ்தான், வங்காளதேசம், ஆப்கானிஸ்தான் ஆகிய நாடுகளில் இருந்து மத ரீதியிலான துன்புறுத்தல்களால் வெளியேறி, இந்தியாவில் தஞ்சம் புகுந்த முஸ்லிம்கள் அல்லாத பிற சிறுபான்மையினருக்கு குடியுரிமை வழங்க வகை செய்துள்ளது.

இந்தச் சட்டத்துக்கு எதிராக வட கிழக்கு மாநிலங்களான அசாம், திரிபுரா, மேகாலயாவில் தொடங்கிய போராட்டம், நாட்டின் பிற பகுதிகளுக்கும் பரவி வருகிறது.

தலைநகர் டெல்லியில் 15-ந் தேதி (ஞாயிற்றுக்கிழமை) ஜாமியா மில்லியா இஸ்லாமிய பல்கலைக்கழக மாணவர்கள் போராட்டம் நடத்தினர். இதில் வன்முறை வெடித்தது. பஸ்கள் தீ வைத்து கொளுத்தப்பட்டன. போராட்டம் நடத்திய மாணவர்கள் மீது போலீசார் தடியடி நடத்தினர். கண்ணீர்ப்புகை குண்டுகளை வீசினர். பல்கலைக்கழக நிர்வாகத்தின் அனுமதியின்றி போலீசார் உள்ளே நுழைந்து மாணவர்கள் மீது நடத்திய தாக்குதல், பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.

இதையடுத்து, தமிழகம் உள்பட நாடு முழுவதும் பல்கலைக்கழகங்கள், கல்லூரிகளின் மாணவ, மாணவிகள் போராட்ட களத்தில் குதித்துள்ளனர். இந்த பரபரப்பான சூழ் நிலையில் குடியரசுத் ராம்நாத் கோவிந்தை சந்தித்து, சர்ச்சைக்குரிய குடியுரிமை திருத்த சட்டத்தை திரும்பப்பெற வலியுறுத்தவும், மாணவர்கள் மீது எடுக்கப்பட்ட போலீஸ் நடவடிக்கையில் தங்கள் எதிர்ப்பை தெரிவிக்கவும் முக்கிய எதிர்க்கட்சிகள் முடிவு செய்தன.

அதன்படி காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி தலைமையில் எதிர்க்கட்சி தலைவர்கள் நேற்று மாலை ஒன்று திரண்டு, குடியரசு மாளிகைக்கு அணிவகுத்து சென்றனர்.

இந்த குழுவில் காங்கிரஸ் மூத்த தலைவர்கள் ஏ.கே.அந்தோணி, கபில்சிபல், குலாம் நபி ஆசாத், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி பொதுச்செயலாளர் சீதாராம் யெச்சூரி, நாடாளுமன்ற மக்களவை தி.மு.க. தலைவர் டி.ஆர்.பாலு, ராஷ்டிரிய ஜனதாதளத்தின் மூத்த தலைவர் மனோஜ் ஜா, திரிணாமுல் காங்கிரஸ் மூத்த தலைவர் தீரக் ஓ பிரையன், சமாஜ்வாடி கட்சியின் மூத்த தலைவர் ராம்கோபால் யாதவ், இந்திய கம்யூனிஸ்டு கட்சி பொதுச்செயலாளர் டி.ராஜா உள்ளிட்டோர் இடம் பெற்றிருந்தனர்.

அனைவரும் சோனியா காந்தியுடன் சேர்ந்து, குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்தை சந்தித்து பேசினர். அவரிடம், நாடு முழுவதும் கடும் எதிர்ப்பை சம்பாதித்து, போராட்டங்களுக்கு வழிவகுத்துள்ள குடியுரிமை திருத்த சட்டத்தை ரத்து செய்ய வேண்டும் என்று அவர்கள் வலியுறுத்தினர். இந்த பிரச்சினையில் குடியரசுத் தலைவர் தலையிட வேண்டும் என்று அவர்கள் கோரிக்கை விடுத்தனர். மாணவர்கள் மீது எடுக்கப்பட்ட போலீஸ் நடவடிக்கைக்கு மிகுந்த வேதனை தெரிவித்தனர்.

அவர்களிடம் உரிய நடவடிக்கை எடுப்பதாக அவர்களிடம் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் உறுதி அளித்ததாக தகவல் அறிந்த வட்டாரங்கள் தெரிவித்தன.

குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்துடனான சந்திப்புக்கு பின்னர் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி நிருபர்களிடம் கூறியதாவது, “மக்களின் குரல்களை ஒடுக்கிவிட்டு, குடியுரிமை திருத்த சட்டத்தை அமல்படுத்தும்போது, மோடி அரசுக்கு இரக்கம் கிடையாது என்பதை நீங்கள் அனைவரும் பார்க்கிறீர்கள் என்று கருதுகிறேன்.

இந்த சட்டத்தை நடைமுறைப்படுத்தியுள்ள நிலையில் நாட்டில் நிலவுகிற சூழல், மிகவும் தீவிரமானதாக உள்ளது. இந்த சட்டத்துக்கு எதிராக வட கிழக்கு மாநிலங்களில் வெடித்த போராட்டம், நாடு முழுவதும் பரவிக்கொண்டிருக்கிறது. இது இன்னும் பரவும் என்றே நாங்கள் பயப்படுகிறோம்.

ஜாமியா மில்லியா இஸ்லாமிய பல்கலைக்கழகத்தில் இந்த சட்டத்தை எதிர்த்து அமைதியான முறையில் ஆர்ப்பாட்டம் நடத்தியபோது, அவர்களுக்கு எதிராக மேற்கொள்ளப்பட்ட போலீஸ் நடவடிக்கை கவலை தருகிறது.” என்றுள்ளார்.

தியாகி திலீபனின் நினைவேந்தல் நிகழ்வுகளுக்கு தடைவிதிக்கப்பட்ட நிலையில், செல்வச் சந்நிதி முருகன் ஆலய முன்றலில் நாளை சனிக்கிழமை முன்னெடுக்கப்படவிருந்த உண்ணாவிரதப் போராட்டத்துக்கு பருத்தித்துறை நீதவான் நீதிமன்றம் தடை விதித்துள்ளது. 

“நினைவேந்தல் உரிமையை வலியுறுத்தியும் ராஜபக்ஷ அரசாங்கத்தின் சர்வாதிகார நடவடிக்கைக்கு எதிராகவும் நாளை சனிக்கிழமையும், எதிர்வரும் திங்கட்கிழமையும் நடைபெறவுள்ள அறவழிப் போராட்டங்களில் தமிழ்பேசும் சமூகத்தினர் அனைவரும் கட்சி பேதமின்றி ஓரணியில் திரண்டு முழுமையான பங்களிப்பை வழங்கவேண்டும்” என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் வேண்டுகோள் விடுத்துள்ளார். 

இந்தியத் திரைவானில் சுமார் 40 ஆயிரம் பாடல்களைப் பாடிய சாதனைச் சொந்தக்காரர் பின்னணிப் பாடகர் எஸ்.பி.பாலசுப்ரமணியம் அமைதியுற்றார்.

7 மாநில முதல் மந்திரிகளுடனான கொரோனா ஆலோசனை கூட்டத்தில் பிரதமர் நரேந்திர மோடி நேற்று கலந்துரையாடினார்.

நாளை வெள்ளிக்கிழமை முதலான வார இறுதி நாட்களில், சுவிற்சர்லாந்தின் பல பகுதிகளில் பனிப்பொழிவு இடம்பெறலாம் என சுவிஸ் வானிலை மையம் அறிவித்துள்ளது.

சுவிற்சர்லாந்தின் புகழ்பெற்ற லொசேன் ஈ.எச்.எல் ஹாஸ்பிடாலிட்டி மேனேஜ்மென்ட் கல்விக் கூடத்தில் சுமார் 2,500 மாணவர்கள், கொரோனா வைரஸ் தொற்றுக் காரணமாகத் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர் என பிராந்திய அதிகாரிகள் நேற்று புதன்கிழமை அறிவித்துள்ளனர்.