இந்தியா
Typography

ஆளும் பா.ஜ.க.வுக்கு நாட்டு மக்களைப் பற்றிக் கவலையில்லை என்று காங்கிரஸ் கட்சியின் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி குற்றஞ்சாட்டியுள்ளார். 

ஜார்க்கண்ட் சட்டசபைக்கான இறுதிக் கட்ட தேர்தல் டிச.,20 ம் தேதி நடக்கிறது. இதற்காக அரசியல் கட்சிகள் தீவிர பிரசாரம் மேற்கொண்டு வருகின்றன. ஜார்கண்டின் பகுர் பகுதியில் காங்., பொதுச் செயலாளர் பிரியங்கா நேற்று பிரசாரம் செய்தார்.

அப்போது பேசிய அவர், “டில்லியில் மாணவர்கள் தங்களின் குரலை உயர்த்தினர். ஆனால் போலீஸ் அவர்கள் மீது தடியடி நடத்தினர். அதற்கு எதிராக நாடு முழுவதும் மாணவர்கள் தெருக்களில் இறங்கி போராடினர்.

இந்த தேர்தல் உங்கள் தாய் மண்ணிற்கான தேர்தல். ஜார்க்கண்டின் தலைவிதியை நிர்ணயிக்கும் தேர்தல் இது. காட்டிலும், நாட்டிலும் ஆயிரக்கணக்கான வண்ணங்கள் உள்ளன. பா.ஜ.க, அந்த எண்ணங்களை பற்றியும், நாட்டில் உள்ள மக்களை பற்றியும் கவலைப்படவில்லை. தொடர்ந்து அடக்குமுறையை கையாள முயற்சிக்கிறது.” என்றுள்ளார்.

BLOG COMMENTS POWERED BY DISQUS

பகிர்வதற்கு

 

 

மின்னஞ்சலில் பதிவுகள்

மின்னஞ்சலில் பதிவுகள்